Ajith Shalini: “இல்லை படிக்கணும்”… கத்தியை காட்டி மிரட்டிய அஜித்… சம்மதம் சொன்ன ஷாலினி

சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், அடுத்து ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே காதல் மனைவி ஷாலினியுடன் இணைந்து தங்களது 23வது திருமண நாளை கொண்டாடினார்.

அப்போது அஜித்தும் ஷாலினியும் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அஜித் – ஷாலினி இடையேயான காதல் குறித்த த்ரோபேக் ஸ்டோரி ஒன்று வைரலாகி வருகிறது.

அஜித் – ஷாலினி காதல்: துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே அஜித்தின் தந்தை கடந்த மாதம் உயிரிழந்ததால் ரசிகர்கள் சோகத்தில் உறைந்திருந்தனர். தற்போது அஜித் – ஷாலினி இருவரும் தங்களது 23வது திருமண நாளை கொண்டாடி ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளனர்.

கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளான அஜித்தும் ஷாலினியும் கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான ஷாலினி, காதலுக்கு மரியாதை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். விஜய் – ஷாலினி கெமிஸ்ட்ரியில் இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு படத்தில் விஜய், ஷாலினி இணைந்து நடித்தனர்.

அப்போது விஜய்க்கும் ஷாலினிக்கும் இடையே காதல் என்றெல்லாம் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி அஜித் – ஷாலினி ஜோடி திருமணம் செய்துகொண்டனர். இதற்கு காரணமாக அமைந்தது அமர்க்களம் திரைப்படம் தான். சரண் இயக்கத்தில் 1999ம் ஆண்டு ரிலீஸான அமர்க்களம் திரைப்படம் அஜித் கேரியரில் தரமான சம்பவமாக அமைந்தது.

 Ajith Shalini: It has been revealed how Shalini consented to Ajiths love

லவ்வர் பாய்யாக நடித்து வந்த அஜித், அமர்க்களம் படத்தில் ரவுடி வாசுவாக மிரட்டியிருப்பார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஷாலினியிடம் கால்ஷீட் கேட்டுள்ளார் சரண். ஆனால், அவர் படிக்க வேண்டும் என மறுத்துவிட்டாராம். இதனால், அஜித்தே நேரடியாக ஷாலினியிடம் சென்று, உங்கள் படிப்புக்கு எந்த தொந்தரவும் இருக்காது என கியாரண்டி கொடுத்துள்ளார். அதன்பிறகே நடிக்க சம்மதம் தெரிவித்தாராம் ஷாலினி.

அதுமட்டும் இல்லாமல் படப்பிடிப்புக்கு வந்த ஷாலினியை ரொம்பவே கேர் எடுத்து பார்த்துள்ளார் அஜித். அமர்க்களம் படத்திற்காக ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது ஷாலினிக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அஜித் தான் பதற்றத்தில் ஷாலினியின் கையில் கத்தியால் கீறிவிட்டாராம். இதனால் வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார் ஷாலினி. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாலினியை அஜித் விழுந்து விழுந்து கவனித்துள்ளார்.

 Ajith Shalini: It has been revealed how Shalini consented to Ajiths love

இந்தச் சம்பவம் தான் அஜித் மீது ஷாலினிக்கு அதிக மரியாதை ஏற்பட காரணமாகியுள்ளது. அதன்பிறகு அமர்க்களம் சூட்டிங் முடிந்த பின்னர் அஜித் ஷாலினியிடம் தன் காதலை கூறியுள்ளார். அப்போது உடனே ஓக்கே சொல்லாத ஷாலினி 6 மாதம் கழித்து தான் சம்மதம் சொன்னாராம். அன்று முதல் இன்று வரை காதல் குறையாத நட்சத்திரத் தம்பதியாக வலம் வருகின்றனர் அஜித்தும் ஷாலினியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.