ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Vijayakanth helping tendency: தனுஷ் அக்கா கார்த்திகாவுக்கு கேப்டன் விஜயகாந்த் டாக்டர் சீட் வாங்கிக் கொடுத்தது பற்றி தற்போது பேசப்படுகிறது.
விஜயகாந்த்தன் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர் கேப்டன் விஜயகாந்த். நாம் தான் நல்லா இருக்கோமே, அது போதுமே என்று அவர் என்றுமே நினைத்தது இல்லை. தன்னை போன்று தன்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என பல உதவிகள் செய்தவர், செய்து கொண்டிருக்கிறவர். கேப்டனிடம் உதவி கேட்டால் இல்லை என்றே சொல்ல மாட்டார் என கோடம்பாக்கத்தினர் பெருமையாக பேசுவது உண்டு.
கேப்டன்தன்னை வைத்து படம் எடுத்த கஸ்தூரி ராஜாவுக்கும் உதவி செய்திருக்கிறார் விஜயகாந்த். செய்யும் உதவியை சொல்லிக் காட்டவும் மாட்டார், வெளியே சொல்லவும் மாட்டார். அது தான் கேப்டனின் சிறந்த குணம். இந்நிலையில் விஜய்காந்த் தனக்கு உதவி செய்ததை நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் கஸ்தூரி ராஜா தெரிவித்தார். அதன் பிறகே அடேங்கப்பா இவ்ளவு பெரிய விஷயத்தை செய்திருக்கிறாரா கேப்டன் என பலரும் வியந்தார்கள்.
டாக்டர் சீட்தனுஷுக்கு இரண்டு அக்காக்கள். அதில் மூத்த அக்கா பல் மருத்துவராக இருக்கிறார். இரண்டாவது அக்காவான கார்த்திகா பிரபல மகப்பேறு மருத்துவர் ஆவார். அவருக்கு டாக்டர் சீட் கிடைக்க கேப்டன் விஜயகாந்த் தான் காரணம். மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஆசையில் தேர்வு எழுதினார் கார்த்திகா. கட்ஆஃப் மார்க்கில் ஒரு மார்க் குறைவாக வந்துவிட்டது. இதையடுத்து வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்திருக்கிறார் கார்த்திகா.
Vijay: ட்விட்டரில் விஜய் அம்மா ஷோபா செய்த சாதனை: தளபதி அம்மானா சும்மாவா!
உதவிTrisha: ஐஸ்வர்யா ராயை பார்ப்பதா, த்ரிஷாவை பார்ப்பதானே தெரியல: ஒரே ஃபிரேமில் எக்கச்சக்க அழகுகார்த்திகா அழுத நேரம் அந்த வழியாக சென்ற விஜயகாந்த் கஸ்தூரி ராஜாவின் வீட்டிற்கு திடீரென்று வந்திருக்கிறார். உங்க மகள் ஏன் இப்படி அழுவுது என்று கஸ்தூரி ராஜாவிடம் கேட்டிருக்கிறார் விஜயகாந்த். அவரும் நடந்ததை எல்லாம் விவரித்திருக்கிறார். அவ்வளவு தானா என ராமசந்திரா மருத்துவமனையின் தலைமை உடையாருக்கு போன் செய்து பேசியிருக்கிறார் விஜயகாந்த். அந்த பெண்ணை நேரில் வரச் சொல்லுங்கள் என்றாராம் உடையார்.
தங்க மனசுதன் மகள் கார்த்திகாவை அழைத்துக் கொண்டு சென்று உடையாரை சந்தித்திருக்கிறார் கஸ்தூரி ராஜா. உடனே கார்த்திகாவுக்கு டாக்டர் சீட் கொடுத்தாராம் உடையார். விஜயகாந்தால் தன் மகள் டாக்டருக்கு படித்தார் என கஸ்தூரி ராஜா தெரிவித்தார். அதை கேட்ட ரசிகர்களோ, கேப்டனுக்கு தங்க மனசு. அந்த வானத்தை போல மனம் படைத்தவர் என்றார்கள்.
Chiyaan Vikram: இது என்னய்யா சீயான் விக்ரமுக்கு நடந்த கொடுமை!: நியாயம் கேட்கும் ரசிகர்கள்
ரசிகர்கள்எல்லோருக்கும் ஓடியோடி உதவி செய்த கேப்டன் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டோடு இருப்பது தான் ரசிகர்களை வேதனை அடைய வைத்திருக்கிறது. சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் தற்போது அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். கேப்டனை இப்படி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அழுகை அழுகையாக வருகிறது என்கிறார்கள் ரசிகர்கள். வீட்டோடு முடங்கினாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும், பாராட்டவும் தவறவில்லை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.