பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார்!
பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக பதவி வகித்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். முன்னதாக, இரப்பை அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டுவந்த பிரகாஷ் சிங் பாதல், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் நேற்று மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் சிங் பாதல் காலமானார். இவரின் மறைவுக்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரகாஷ் சிங் பாதலின் மறைவையடுத்து, நாடளவில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.