பன்னீர்: மற்றுமொரு சசிகலாவா? – கழுகார்: சின்னவருக்காக காத்திருந்த அமைச்சர்- விஜய் கொடுத்த நம்பிக்கை!

பகடைக்காயாக பயன்படுத்தும் டெல்லி! – பன்னீர்… மற்றுமொரு சசிகலாவா?

சசிகலா, பன்னீர்

ல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வந்தார் பிரதமர் மோடி. அவரைச் சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். ஆனால், இருவருக்குமே நேரம் ஒதுக்க மறுத்துவிட்டு, கையை மட்டும் குலுக்கிவிட்டுப் புறப்பட்டார் மோடி. இந்தப் புறக்கணிப்பை ஓ.பி.எஸ் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

“தன்னைச் சந்திக்க வேண்டுமென எடப்பாடி நேரம் கேட்டவுடன் சம்மதம் தெரிவிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால், நேரம் கேட்டுப் பலமுறை முட்டியும், டெல்லியின் பார்வை ஓ.பி.எஸ் பக்கம் திரும்பவில்லை. வெறும் அரசியல் பகடைக்காயாக மட்டுமே ஓ.பி.எஸ்ஸை டெல்லி பயன்படுத்தி வருகிறது” எனக் குமுறுகிறார்கள் அவர்கள்.

இருப்பினும், தற்போதைய நிலைமை மாறும் என பன்னீர் தரப்புக்கு நம்பிக்கை அளிக்கும் அந்த ஒரு விஷயம் என்ன..?

பன்னீர் மற்றுமொரு சசிகலாவா அல்லது அ.தி.மு.க-வின் அதிகார வட்டத்துக்குள் மீண்டும் டெல்லியால் நுழைக்கப்படுவாரா..?

இன்று வெளியான ஆனந்த விகடனில் இடம்பெற்ற விரிவான அலசல் கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

கழுகார் அப்டேட்ஸ்: சின்னவருக்காகக் காத்திருந்த அமைச்சர்!

கழுகார் அப்டேட்ஸ்

லைக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ‘மில்க்’ அமைச்சரின் வீட்டில் நடந்த துக்க நிகழ்வுக்கு, நேரில் சென்று அனுதாபம் தெரிவித்திருக்கிறது அந்தக் கட்சியின் தலைமை. இதன் பின்னணியை விசாரித்தால், துக்க நிகழ்வைக் கேள்விப்பட்டதும் முதன்முதலாக அவருக்கு அனுதாபம் தெரிவித்தது சின்னம்மாதானாம். இதில், “என்னதான் இருந்தாலும் சின்னம்மா சின்னம்மாதான்யா” என உருகிப்போனராம் மில்க்.

கழுகார் அப்டேட்ஸில் மேலும்…

* மோதலுக்குத் தயாராகும் இரு அமைச்சர்கள்!

* சின்னவருக்காகக் காத்திருந்த அமைச்சர்..!

* “மனசே சரியில்லை..!” – ஊருக்குக் கிளம்பிய அமைச்சர்!

* வகையாக லவட்டிய தலை… டோஸ்விட்ட அமைச்சர்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

அமித் ஷா மீது போலீஸில் புகாரளித்த காங்கிரஸ்…  காரணம் என்ன?

அமித் ஷா

ர்நாடகாவில் எதிர்வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக பா.ஜ.க மூத்த தலைவர்கள் தீவிர பிராசத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வகுப்புவாத கலவரம் ஏற்படும்” எனப் பேசியிருக்கிறார். இதற்கு காங்கிரஸ் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

IPL 2023 RoundUp: விராட் கோலியின் புதிய சாதனை!

விராட் கோலி

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அணியின் கேப்டனான விராட் கோலி, 37 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் இவர், சின்னசாமி மைதானத்தில் டி20 போட்டிகளில் விளையாடி 92 இன்னிங்ஸில் 3,015 ரன்களை அடித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

12 மணி நேர வேலை… நம்மை என்னவாக மாற்றும்?

12 மணி நேர வேலை

மிழ்நாடு அரசு 12 மணி நேர வேலைத் திட்டத்தை அங்கீகரித்து சட்டம் இயற்றிய நிலையில், எதிர்ப்புகளைத் தொடர்ந்து இதன் செயலாக்கத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்திருக்கிறது.

கம்யூனிச சீனாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தில் 6 நாள்கள் வேலை. இந்த வேலை நெருக்கடி தாளாமல் அங்கு தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. சீனக் குடும்பங்களில் குழந்தை பிறப்புகள் குறைந்திருப்பதற்கும் இந்த வேலை நேர நெருக்கடிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகப் பல ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த ’12 மணி நேர வேலைக்கலாசாரம் நம்மை என்னவாக மாற்றும்?’

இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றுள்ள விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

முழங்கை மூட்டில் வலி… எலும்புகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி?

மூட்டு வலி

“எலும்புகளின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? எனக்கு முழங்கைகளில் வலி உள்ளது. அதற்கான தீர்வையும் சொல்லவும்.”

– வாசகரின் இந்த கேள்விக்கு மூட்டு, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது இஸ்மாயில் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

விஷாலுக்கு நம்பிக்கைக் கொடுத்த விஜய்!

விஜய் – விஷால்

விஜய், லோகேஷ் கனராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் விஷாலை நடிக்கக் கேட்டனர். ஆனால், விஷால் இப்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளினால் ‘லியோ’ கேட்ட தேதிகளை ஒதுக்க முடியாமல் போனது.

இந்நிலையில் விஜய்யை நேரில் சந்தித்து, தனது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசரை காண்பித்து மகிழ்ந்திருக்கிறார் விஷால். டீசரை பார்த்து பாராட்டியதுடன், விஷாலுடன் சேர்ந்து பயணிக்க நம்பிக்கை கொடுத்துள்ளார் விஜய.

இது குறித்த மேலும் விவரங்களைத் தெரிய இங்கே க்ளிக் செய்க…

பிள்ளை நிலா: டென்ட் கொட்டாய் டைரீஸ்…

பிள்ளை நிலா

னோபாலா இயக்கிய முதல் திரைப்படமான ‘ஆகாய கங்கை’ தோல்வியடைந்தது. நடிகர் மோகன் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தவர் மனோபாலா. அந்த நட்பு காரணமாக மோகன் வாய்ப்பு தர, மனோபாலா அடுத்து இயக்கிய ‘நான் உங்கள் ரசிகன்’ படமும் தோல்வியை அடைந்தது. இளையராஜா தயாரித்த இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் ‘ஹிட்’ என்றாலும் படம் வெற்றியைப் பெறவில்லை.

ற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் ‘பிள்ளை நிலா’.

அப்போது மோகன் பல திரைப்படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ‘இரவு நேரங்களில் நடித்துத் தருகிறேன்’ என்று சொன்னார். எனவே இரவுக் காட்சிகள் அதிகம் இருக்குமாறு எழுதப்பட்ட திரைக்கதைதான் ‘பிள்ளை நிலா’. இதன் பிறகு மனோபாலா பிஸியான இயக்குநராக மாறுவதற்குக் காரணமாக இந்தத் திரைப்படம் அமைந்தது.

படம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.