புதுடில்லி:’அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும், கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடர்பான விசாரணை உள்ளிட்டவற்றை, ‘டிஜிட்டல்’ மயமாக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனை
குஜராத்தில், ௨௮ ஆண்டுக்கு முன் தொடரப் பட்ட லஞ்ச வழக்கில் ஒருவருக்கு மாவட்ட நீதிமன்றம் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது.
ஆனால், இது தொடர்பான ஆவணங்கள் எதுவும் மாவட்ட நீதிமன்றத்தில் கிடைக்கவில்லை. மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விசாரித்த உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த தண்டனையை ரத்து செய்து, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, சஞ்சய் கரோல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:
தொழில்நுட்ப வசதி கள், நீதிமன்றங்களுக்கு பெரும் அளவில் உதவுகின்றன.
அனைத்து வழக்குகளின் விசாரணையையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என, ௨௦௨௧, செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் சில நடைமுறைகளை அறிவித்தது.
உறுதி
இதன்படி, அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவு செய்வதில் இருந்து, விசாரணை உள்ளிட்டவற்றையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். இதை மாவட்ட நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றங்களும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement