சென்னை: நடிகை சமந்தா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சென்னை பொண்ணான சமந்தா சர்வதேச அளவில் தனக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.
நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், பாலிவுட், சர்வதேச திரைப்படங்கள் என தனக்கு மிகவும் பிடித்த சினிமாத் துறையில் அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறார்.
மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக நலிவுற்ற நிலையிலும், தொடர்ந்து போராடி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள சமந்தா ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் குறித்தும் அவரது சொத்து மதிப்பு குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..
சமந்தா பிறந்தநாள்: சாதனை நாயகியாக வலம் வரும் சமந்தா 1987ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி சென்னையில் பிறந்தார். பல்லாவரத்தில் வாழ்ந்து வந்த சமந்தா ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்த சமந்தா தனது டிகிரியை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்து பெற்றார்.
மாடலிங்கில் ஆர்வம் செலுத்தத் தொடங்கிய நிலையில், நாயுடு ஹால் உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்து வந்த போது ரவி வர்மன் பார்வையில் பட்ட சமந்தாவுக்கு கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோயினாகவும் தமிழ் வெர்ஷனில் சிறிய கதாபாத்திரத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் படத்திலேயே நாக சைதன்யா உடன் இணைந்து நடித்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து 2017ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்துக் கொண்டனர்.
மாறி மாறி காதலை பொழிந்து வந்த இருவரும் திடீரென 2021ல் தங்கள் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நாக சைதன்யாவை பிரிந்த நிலையில், நடிகை சமந்தா சினிமாவில் தீவிரமாக ஆர்வம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் டாப் ஹீரோயினாக நடித்து வந்த சமந்தா சமீப காலமாக பாலிவுட் பக்கம் தனது பார்வையை செலுத்தி உள்ளார்.

சமந்தாவின் சம்பளம்: விஜய்யுடன் தெறி, கத்தி, மெர்சல் என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்த நிலையில் சமந்தா முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் மாறினார். டோலிவுட்டில் ஓ பேபி, யசோதா என உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்தும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி உள்ளார்.
நடிகை சமந்தா புதிய படங்களுக்கு அதிகபட்சமாக 6 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆன நிலையில், தளபதி 68 படத்தில் சமந்தா தான் ஹீரோயின் என இப்பவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
விளம்பரங்களில் கொட்டும் வருமானம்: சினிமாவில் நடிப்பதை விட நடிகை சமந்தா எக்கச்சக்க விளம்பரங்களில் நடித்து தனியாக பெரிய வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் சம்பாதித்து வருகிறாராம்.
Saaki எனும் ஃபேஷன் லைன் அப்பை 2020ம் ஆண்டு சுஸ்ருதி கிருஷ்ணா உடன் இணைந்து தொடங்கினார் சமந்தா. 2016ல் மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னர் அப் ஆனவர் சுஸ்ருதி கிருஷ்ணா.
ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பிரபல நிறுவனத்தின் சூப்பர் ஃபுட் நிறுவனத்தில் முதலீடு செய்த சமந்தாவுக்கு ஆண்டுதோறும் 2 மில்லியன் டாலர் வருமானம் வருவதாக கூறுகின்றனர்.
சஸ்டெயின் கார்ட் எனும் இ – காமர்ஸ் நிறுவனம், மிவி பிராண்டின் விளம்பர தூதர் மேலும் பெப்சி உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்து வரும் சமந்தாவுக்கு ஏகப்பட்ட வருமானங்கள் குவிந்து வருகின்றன.

பங்களா: ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸில் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் சொகுசு பங்களா ஒன்று சமந்தாவுக்கு சொந்தமாக உள்ளது. மேலும், மும்பையிலும் சமந்தா ஒரு வீட்டை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தெலங்கானாவிலும் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் சமந்தா என்கின்றனர்.
கார்கள்: நடிகர்களை போல நடிகை சமந்தாவுக்கு சொகுசு கார்களை வாங்கி காரேஜில் அடுக்கி வைக்க வேண்டும் என்கிற ஆசை இல்லவே இல்லை. BMW 3 series, BMW X5 மற்றும் Jaguar XFR உள்ளிட்ட கார்களை மட்டுமே வைத்திருக்கிறாராம்.

சொத்து மதிப்பு: சினிமா, விளம்பரம், முதலீடுகள் என நடிகை சமந்தாவுக்கு ஆண்டு தோறும் ஏகப்பட்ட வருமானம் வந்து குவியும் நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 13 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக சமந்தா உள்ளார் என்கின்றனர்.
அதாவது இந்திய மதிப்பில் சுமார் 101 கோடி சொத்து மதிப்புக்கு சொந்தக்காரி சமந்தா என தகவல்கள் வெளியாகி உள்ளன. சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அடுத்ததாக வெளியாக உள்ள குஷி படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!