சென்னை: பிப்ரவரி மாதம் விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங் கோலாகலமாக காஷ்மீரீல் தொடங்கிய நிலையில், அதற்கு போட்டியாக ஏகே 62 படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பம் ஆகும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர்.
ஆனால், இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்கிற அப்டேட் தான் ரசிகர்களுக்கு ஏகே 62வில் இருந்து கிடைத்தது.
அதன் பிறகு மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் அந்த படத்தை என்கிற தகவல்கள் மட்டுமே இதுவரை ரசிகர்களுக்கு தெரிந்துள்ள நிலையில், மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளிலாவது ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகுமா? என்கிற ஏக்கத்துடன் அஜித் ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருக்கின்றனர்.
மீண்டும் பைக் டூர் சென்ற அஜித்: ஏகே 62 படத்தின் அப்டேட் காலதாமதம் ஆவதை அறிந்து கொண்ட நடிகர் அஜித் இந்த கேப்பை வீணாக்க வேண்டாம் என நினைத்து மீண்டும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு வட இந்தியாவில் பைக் சுற்றுலா செய்து வருகிறார். சமீபத்தில் நேபாளம் அருகே அவருடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின.
அஜித் பிறந்தநாளுக்காவது அப்டேட் வருமா?: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி நாளை வரவுள்ள நிலையில், இந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் உடன் கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
ஆனால், பைக் டூரில் இருந்து அஜித் மீண்டும் சென்னைக்கு வருவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியாகுமா? என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு பலமாக உள்ளது.

அதற்கு காரணம் பொன்னியின் செல்வன் 2 ஃபீவரில் இருந்து இன்னும் லைகா நிறுவனம் இந்த பக்கம் வருவதாகவே தெரியவில்லை என்பதால் தான்.
லேட்டாகும்: மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் மகிழ் திருமேனி தான் என்கிற அறிவிப்பையாவது கொடுங்க லைகா நிறுவனம் என ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.
ஆனால், அஜித் பிறந்தநாளுக்கு ஏகே 62 படத்தின் அப்டேட் வருவது சந்தேகம் தான் என்றும் ஆனால், வெகு சீக்கிரமாகவே அஜித் பட அறிவிப்பு மற்றும் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகும் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.