₹ 10,00,00,00,000 ரூபாய்.. திமுக அரசை பார்த்தீங்களா? வேறலெவலுக்கு மாறும் \"வடசென்னை\"..அட புரசைவாக்கம்

சென்னை: வட சென்னை மேம்பாட்டு திட்டத்துக்கு 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு முக்கிய செய்தி ஒன்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 2 சலவைக் கூடங்களை தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்வது தொடர்பாகவும் கள ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் சேகர்பாபு.

34 அறிவிப்புகள்: இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, 2023-24-ம் நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்தும் பணி நடக்கிறது.

குறிப்பாக, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 2 சலவைக் கூடங்களை தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதிய குடியிருப்புகள்: பிராட்வே, பி.ஆர்.என். கார்டனில் அமைந்துள்ள 146 குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 86 குடியிருப்புகள் கள ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1000 crore will be spent on north chennai development project in 3 years, says Minister sekar babu

பி.ஆர்.என். கார்டன் பகுதியில் அமைந்திருக்கின்ற பழுதடைந்த நிலையில் இருக்கும் இக்குடியிருப்பில் வசிக்கின்ற மக்களின் பாதுகாப்புக் கருதி, இக்குடியிருப்பு மக்களை வேறு பகுதிக்கு மாற்றம் செய்து, அப்பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டியமைத்து ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வட சென்னை பகுதியின் மேம்பாட்டு பணிக்கு ரூ.1000 கோடி 3 ஆண்டுகளில் செலவிடப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

வரவேற்பு: இதுபோன்ற இதுவரையில் யாரும் பாராமுகமாக இருந்த உழைக்கின்ற தொழிலாளர்களுடைய உயிர்மூச்சாக, இதுபோன்ற பணிகளை உடல் ஆராக்கியத்தை பேணுகின்ற சமுதாய சீரழவிலிருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்கு உண்டான விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவது போன்ற அதிமுக்கிய பணிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் பயன்பெறுகின்ற வகையில் பணிகளை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து இந்தத் திட்டங்களை எடுத்து செயல்படுத்துவது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றது” என்றார் அமைச்சர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.