சென்னை: நடிகர் அஜித் வேர்ல்ட் டூர் செய்யும் புகைப்படத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அஜித்குமார் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்தது. போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தைவிட துணிவு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அஜித் உற்சாகத்தோடு காணப்படுவதாகவும் அடுத்தடுத்த படங்களையும் ஹிட்டாக்கிட வேண்டும் என்ற முனைப்போடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏகே 62: வழக்கமாக ஒரு படத்தை முடித்து ஓய்வு எடுத்து அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் . லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதையில் இரண்டாம் பாதி லைகா நிறுவனத்துக்கு பிடிக்காததால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன்.
மகிழ் திருமேனியின் விடா முயற்சி : விக்னேஷ் சிவன் வெளியேறியதை அடுத்து அஜித் 62ஆவது படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட்டாகியிருக்கிறார். கதையை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியிருந்த அவர் தற்போது கதையை இறுதி செய்துவிட்டார். இதனையடுத்து அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் வேர்ல்ட் டூர்: இதற்கிடையே பரஸ்பர மரியாதை பயணம் என்ற பெயரில் நடிகர் அஜித்குமார் பைக்கில் வேர்ல்ட் டூர் சென்றுகொண்டிருக்கிறார். ஏகே 62 படத்தை முடித்துவிட்டு வேர்ல்ட் டூர் செல்லலாம் என முடிவெடுத்திருந்த அவர் படம் தொடங்க தாமதம் ஆனதால் முதல்கட்ட பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டானது.

விழிப்புணர்வு: இந்நிலையில் காரைக்குடி துணை எஸ்.பி ஸ்டாலின் தனது ட்விட்ட ர்பக்கத்தில், தலைக்கவசம், உயிர்க்கவசம் என்று கூறி அஜித் குமாரின் சமீபத்திய வேர்ல் டூரில் எடுக்கப்ப்ட்ட புகைப்ப்டத்தை பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. மேலும், அந்தப் பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் தனது வேர்ல்ட் டூரை தனக்காக அவர் பயன்ப்டுத்திக்கொண்டாலும் அது சமூகத்துக்கும் விழிப்புணர்வு ஏற்ப்டுத்தும்வகையில் அமைந்திருப்பதாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.