Delhi: குறைந்த கொரோனா பாதிப்பு… ஆனால் அதிகரித்த உயிரிழப்பு… ஒரே நாளில் 36 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் அதிகரித்தது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்தியாவில் 3,611 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 36,244 லிருந்து 33,232 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 36 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 5,31,642 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்.

Manipur: மணிப்பூர் வன்முறையில் 13 பேர் பலி…ரயில் சேவை நிறுத்தம்..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.49 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,43,99,415 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு முழுவதும் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது உருமாறிய கொரோனா தொற்றுகள் பரவி வருகின்றன அந்த வகையில் கேரளாவில் புதிய வகை கொரோனா தொற்று பாதித்த சிலருக்கு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். அந்த சோதனையில் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு வித கண் நோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Serbia: மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பலி… 2 நாளில் 2வது சம்பவம்!

மேலும் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேருக்கு தொண்டை வலி ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. அதோடு லேசான காய்ச்சல் இருந்ததும் மருத்துவர்கள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த புதிய வகை கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமாக இல்லை என்றும் சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.