சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது.
படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்டவர்களும் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாவீரன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி : நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் படத்தில் மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.
ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று மாலை படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். படம் தற்போது முன்னதாகவே திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ம் தேதியே படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக ஆகஸ்ட் 11ம் தேதி மாவீரன் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இரு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளதாக தெரியவந்தது. இதை தொடர்ந்தே, தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஜெயம் ரவியின் இறைவன் படமும் இதேதேதியில் அதாவது ஜூலை 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி வெளியானால், சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவியின் படங்கள் நேரடியாக மோதும். ஜெயம்ரவியின் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்தப் படத்தில் ஜெயம்ரவியுடன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதனால் இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் அதிகமான வரவேற்பை கொடுப்பார்கள்.
ஜூலை மாதத்தில் எந்தவிதமான பண்டிகையும் இல்லாத போதிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை கருத்தில் கொண்டு இந்தப் படங்கள் ரிலீசாகவுள்ளன. இந்த இரு படங்களில் எந்தப் படம் ரசிகர்களை கவரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரஜினியின் படம், பண்டிகையை மையமாக கொண்டு வெளியாகவுள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எந்தவிதமான பண்டிகையும் இல்லாமல் சாதாரண நாளில் வெளியாகவுள்ளது. அவரது முந்தைய படமான பிரின்ஸ் தீபாவளியொட்டி வெளியானது குறிப்பிடத்தக்கது.