இனி ரயில் டிக்கெட் பரிசோதர்களின் உடலில் கேமரா..?

ரயில்களில் சமீபகாலமாக டிக்கெட் பரிசோதகர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சில டிக்கெட் பரிசோதகர்கள் அநாகரீகமான செயல்களிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. உதாரணமாக கடந்த மார்ச் மாதம் கூட ஒரு சம்பவம் நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் அமிர்தசரஸை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது முன்னா குமார் (37) என்ற டிக்கெட் பரிசோதகர் பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்த்தபடி வந்து கொண்டிருந்தார்.

இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால், ரமேஷும், அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனர். மின் விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த முன்னா குமார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை., திடீரென ரமேஷின் மனைவி மீது சிறுநீர் கழிக்க தொடங்கினார். இதனால் திடுக்கிட்டு முழித்த அப்பெண் கூச்சலிடவே, அவரது கணவரும், மற்ற பயணிகளும் சேர்ந்து முன்னா குமாரை நையப்புடைத்தனர்.

மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் முன்னா குமார் கைது செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார். இதேபோல், தமிழகத்திலும் பயணிகளிடம் அநாகரீகமான வார்த்தைகளை பேசியதாக ஒரு ரயில் டிக்கெட் பரிசோதகர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுபோல் தினமும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

எதிர்காலத்தில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இது போன்ற புகார்கள் வரும்போது அந்த புகார்கள் குறித்த உண்மை தன்மை அறிவதற்காக டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்தும் முறை அமல் படுத்தப்பட்டிருக்கிறது .

முதலில் மத்திய ரயில்வேயில் சோதனை முறையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக 50 பாடி கேமராக்கள் வாங்கி மும்பையில் கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் வெற்றியை பொறுத்து நாடு முழுவதும் உள்ள டிக்கெட் பரிசோதகர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது .

இந்த கேமராவின் விலை 9 ஆயிரம் ரூபாய். 20 மணி நேரத்திற்கு இந்த கேமரா நிகழ்வுகளை பதிவு செய்கிறது. ஒரு புகார் வந்தால் யார் மீது தவறு என்பதை வீடியோ காட்சியோடு ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தால் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும். தேவையில்லாமல் பெயர் கெட்டுப் போவது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.