சென்னை : நடிகர் ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் மேகா கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
உதவி இயக்குனராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
இப்படத்தில் யன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
ராஜா ராணி : ராஜா ராணி என்ற மகத்தான வெற்றிப்படத்தை கொடுத்து நல்ல இயக்குநர் என பெயர் எடுத்தார். ஒரு சிறு இடைவெளிக்கு பின், இப்படத்தில் நடித்த நயன்தாராவுக்கு இப்படம் ஒரு கம்பேக் படமாக அமைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா நடித்து படு பிஸியானார்.
பாலிவுட்டில் அட்லீ : ராஜா ராணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைத்த அட்லீ, அடுத்தடுத்து அவரை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹார்டிக் வெற்றிப்படங்களை கொடுத்தார். கோலிவுட் கலக்கிய அட்லீ பாலிவுட்டில் தனது தடத்தை பதிக்க திட்டமிட்டு, ஷாருக்கானிடம் கதை சொன்னார். ஷாருக்கானுக்கு கதைபிடித்துப்போக தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திலேயே படத்தை தயாரித்து வருகிறார்.

நயன்தாரா : இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை நடிகராக யோகிபாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.
இந்த படமும் காப்பியா? கமல் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் காப்பி என தெரிய வந்துள்ளது. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமல் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பார். பழிவாங்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தின் மையக்கருவைதான் அட்லீ ஜவான் படத்திலும் பயன்படுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜவான் ரிலீஸ் தேதி : இப்படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.