தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் எந்த படிப்புகளை தேர்வு செய்வது மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற பல முக்கியமான விஷயங்கள் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு எந்த படிப்பை தேர்வு செய்வது, எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்வி கடன் பெறுவது எப்படி, கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி என பல்வேறு விதமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தெரிந்து கொள்ள 14477 என்ற இலவச எண்ணை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.