கம் பேக் கொடுக்கும் மாதேஷ்… அதுவும் சீமானுடனா..? உறுதியாக சொல்லும் தகவல்

சமீபத்தில் ஸ்டிங் ஆபரேஷன் என்று பிரபல யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏற்கனவே இந்த மதன் ரவிச்சந்திரன் தமிழக பாஜக முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்டு பகீர் கிளப்பினார்.

அந்த வீடியோவுக்கு பிறகு கே.டி. ராகவன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இப்போது மீடியா வெளிச்சம் படாமல் அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், நீண்ட நாட்களாக மாயமாகி இருந்த மதன் ரவிச்சந்திரன் பிரபல யூடியூப் நெறியாளர்களின் ஸ்டிங் வீடியோக்களை வெளியிட்டு கம் பேக் கொடுத்தார்.

அந்த வீடியோவில், பிரபல யூடியூபர்ஸ்களான மாதேஷ், முக்தார், ஐயப்பன் ராமசாமி, ரவீந்திரன் துரைசாமி, ராஜவேல் நாகராஜன் ஆகியோர் அரசியல்வாதிகளை டார்கெட் செய்து இன்டர்வியூ எடுக்க பணம் பெறுவது, சரக்கு அடிப்பது, கிப்ட் பொருட்களை வாங்குவது போன்றவை அம்பலமானது. இதனால் அவர்கள்து பெயருக்கு களங்கம் ஏற்பட்டு மாதேஷ், ஐயப்பன் ராமசாமி இருவரும் மீடியாவில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.

இதில் மாதேஷ் மட்டும் மன்னிப்பு கேட்டு உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் மாதேஷ் நெறியாளராக கம் பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் மாதேஷ் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. சீமானுடன் நேர்காணல் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அந்த வீடியோ மூலம் மாதேஷ் மீண்டும் கம் பேக் கொடுக்கப்போவதாகவும் சில அதிகாரபூர்வ கணக்குகளில் இருந்து தெரிவிக்கின்றனர்.

முன்னதாக மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டிருந்த ஸ்டிங் வீடியோவில் யூடியூபர் மாதேஷ் சீமானை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் ஐடி விங் 6 லட்சம் பேரம் பேசியதாகவும் அதற்கு இவர் 10 லட்சம் கேட்டதாகவும் மாதேஷ் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இப்போது சீமானுடனே மாதேஷ் நேர்காணல் எடுத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் நெட்டிசன்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.