பெற்ற குழந்தைகளுக்கு பாலியில் தொல்லை: கதறிய குழந்தைகள்.. கண்டுகொள்ளாத தாய்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கரையூரை சேர்ந்தவர் தேவி(வயது 36). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்து விட்டார், இதனால் தேவி மற்றும் அவரது குழந்தைகள் மீது அக்கறை கொண்டவர்களின் முயற்சியில் அங்கன்வாடி ஒன்றில் பணியமர்தபட்ட தேவிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் குடும்பம் நடத்த தொடங்கினர்.

அதுமட்டுமல்லாமல் தேவிக்கு பல முறையற்ற தொடர்புகள் உள்ளதால் அவரது உறவினர்கள் தேவியிடம் இருந்து தள்ளியே இருந்துள்ளனர்.

இந்நிலையில் , முத்துபாண்டிக்கு திடீரென உடல்நிலை பாதிப்படைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அப்போது அவரை கவனித்துகொள்வதற்காக தேவியும் அங்கே சென்றுள்ளார். அப்போது தேவிக்கு தூத்துகுடியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது, மேலும் அவரது வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று தங்கியுள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததோடு சுரேஷ் பெண் குழந்தைகளிடமும் சில்மிசம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.இது தெரிந்ததிருந்தும் தேவியும் சுரேசிற்கு ஒத்துளைத்துள்ளார்.

இந்த விஷயம் போலீசாருக்கு தெரிய வர தேவியையும், 58 வயதான சுரேஷயையும் கைது செய்துள்ளனர்.இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது .தேவியின் மகள்களுக்கு 10 வகுப்பு படித்து வரும் அதே பகுதியை இரண்டு மாணவர்கள் பாலியில் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அதனையும் தேவி கண்டுகொள்ளாமல் உடந்தையாக இருந்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 2 மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.

பெற்ற தாயே மகள்களுக்கு பாலியில் துன்புறுத்தல் நடக்க உடந்தையாக செயல்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.