புகையிரதத் திணைக்களத்திற்கு புதிய ஊழியர்கள் 3000 பேரை உள்வாங்கவிருப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது – அமைச்சர் பந்துல குணவர்தன

ஆரசாங்க நிறுவனங்களை மறுசீரமைத்தலின் கீழ் சுயமாக சேவையிலிருந்து இளைப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதற்கிணங்க புகையிரதத் திணைக்களத்தின் சில ஊழியர்கள் சுயமாகவே ஓய்வுபெற்றுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துலகுணவர்தன இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களை மூடி, ஊழியர்களை நீக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் கேட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

புகையிரதத் திணைக்களத்திற்குப் புதிய ஊழியர்கள் 3000 பேரை உள்வாங்குவது தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சர் வலியுறுத்தினார்.

பல்திறன் படையின் கீழ் தற்போது வரை அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள நபர்களில், அவ்வாறே புகையிரதத் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தற்போது சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இயந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளன. விருப்பமானவர்களுக்கு மாத்திரம் இவ்வாறு சுயமாக ஓய்வுபெறச் சொல்வதானது, எவ்வித பலவந்தமும் அல்ல. விருப்பமானவர்கள் 600 பேரளவில் அவ்வாறு கலந்துரையாடலின் பின்னர் ஓய்வுபெற்றுள்ளார்கள்ஹ~ என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.