புதிய நாடாளுமன்றம் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது நியாயமற்றது – மாயாவதி

லக்னோ,

டெல்லியில் வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. இந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்கும் முடிவில் உள்ளன.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது என்பது நியாயமற்றது. மத்திய அரசு தான் நாடாளுமன்றத்தைக் கட்டியது என்பதால், அதனை திறந்துவைக்கும் உரிமை அதற்கு உள்ளது என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியோ அல்லது பாஜக ஆட்சியோ எதுவாக இருந்தாலும், பகுஜன் சமாஜ் கட்சி, நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் கட்சி அரசியலைத் தவிர்த்து மத்திய அரசுக்கே ஆதரவு அளிக்கும். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவையும் அவ்வாறு பகுஜன் சமாஜ் கட்சி அணுகுகிறது. இதனை கட்சி வரவேற்கிறது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.