105 வருடங்களாக ஒரே வீட்டில் வசிக்கும் பிரித்தானிய பெண்மணி!


பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணி தான் பிறந்ததிலிருந்து கிட்டத்தட்ட 105 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

ஒரே வீட்டில் 105 ஆண்டுகள் வசிக்கும் பெண்

1918-ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் ஹுத்வைட்டின் மையத்தில், பார்கர் தெருவில் உள்ள ஒரு அழகான இரண்டு படுக்கையறை வீட்டில் எல்சி ஆல்காக் (Elsie Allcock) பிறந்தார்.

இப்போது 105 வயதாகும் அவர், ஆச்சரியப்படும் விதமாக இன்னும் அதே வீட்டில் வாழ்கிறார். அதாவது 105 வருடங்களாக அவர் ஒரே வீட்டில் வசிக்கிறார்.

105 வருடங்களாக ஒரே வீட்டில் வசிக்கும் பிரித்தானிய பெண்மணி! | Uk Women Lived In The Same House For 105 YearsSWNS

மேலும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டால் கூட தன்னால் இனி இந்த வீட்டை விட்டு வேறு எங்கேயும் சென்று வசிக்க முடியாது என உறுதியாக இருக்கிறார்.

எல்சிக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு பேர குழந்தைகள் மட்டுமல்லாமல், 14 கொள்ளு பேரக்குழந்தைகளும், 11 எள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

105-வது பிறந்த நாள்

இந்நிலையில், இன்னும் சில நாட்களில் தனது 105-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார் எல்சி. அதிலும் தான் 105 வருடங்களாக வாழ்ந்த அதே வீட்டிலேயே தனது 105வது பிறந்த நாளை அவர் கொண்டாட உள்ளார்.

105 வருடங்களாக ஒரே வீட்டில் வசிக்கும் பிரித்தானிய பெண்மணி! | Uk Women Lived In The Same House For 105 YearsSWNS

தன் வாழ்நாளில் இதுவரை இரண்டு உலகப் போர்கள், நிலவில் மனிதன் முதல் காலடி வைத்த தருணம், பெருந்தொற்றுக்கள் என அனைத்தையுமே சந்தித்துள்ளார் எல்சி. அதுவும் அதே வீட்டில் இவை அனைத்தையும் கடந்துவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரித்தானியாவில் 22 பிரதமர்கள் மற்றும் 5 முடியாட்சிகள் ஆகியவற்றையும் பெண்மணி கண்டுள்ளார். அந்த வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்த எல்சிக்கு மொத்தம் ஐந்து பேர் உடன் பிறந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். 1941-ஆம் ஆண்டு திருமணமான பிறகும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

105 வருடங்களாக ஒரே வீட்டில் வசிக்கும் பிரித்தானிய பெண்மணி! | Uk Women Lived In The Same House For 105 YearsSWNS

கடன் வாங்கி சொந்தமாக்கிக்கொண்ட வீடு

இந்த வீட்டை ஆரம்பத்தில் கடன் வாங்கியே சொந்தமாக்கிக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் 250 பவுண்டுகள் கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும், பின்பு கடன் வாங்கி தான் இந்த வீட்டை சொந்தமாக்கிக் கொண்டதாகவும், 2022-ல் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், “இந்த வீட்டில் பெரிதாக எந்தவித மாற்றங்களும் செய்ததில்லை. இங்கு இருப்பதைவிட நான் வேறு எங்கேயும் சந்தோஷமாக இருந்ததில்லை” என்று எல்சி கூறுகிறார்.

105 வருடங்களாக ஒரே வீட்டில் வசிக்கும் பிரித்தானிய பெண்மணி! | Uk Women Lived In The Same House For 105 YearsITV News

இன்றைய மதிப்பு

அப்போது 250 பவுண்டுகளுக்கு வாங்கிய இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 75,000 பவுண்டுகள் ஆகும்.

தற்போது எல்சி-யின் கணவர் காலமாகிவிட்டாலும், தன்னுடைய மகன் ரேவுடன் கடந்த 26 அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். 

105 வருடங்களாக ஒரே வீட்டில் வசிக்கும் பிரித்தானிய பெண்மணி! | Uk Women Lived In The Same House For 105 YearsITV NewsSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.