அதிர்ச்சி சம்பவம்..!! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மத்திய உணவில் பாம்பு..!

பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் பார்பிஸ்கஞ்ச் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மத்திய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பார்பிஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று முன்தினம் மத்திய உணவாக கிச்சடி வழங்கப்பட்டது.

இந்த உணவை சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்கொண்ட நிலையில், அதில் ஒரு மாணவருக்கு பறிமாறிய சாப்பாட்டில் பாம்பு ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது தான் சமைத்த உணவில் பாம்பு இருந்ததை கவனிக்கவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடனடியாக உணவு பறிமாறுவது நிறுத்தப்பட்டு, மாணவர்களுக்கு தகவல் தரப்பட்டது.

அதற்குள்ளாகவே, உணவை உட்கொண்ட மாணவர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த உணவு சாப்பிட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், டிஎஸ்பி, கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பள்ளியில் ஆய்வு நடத்தினர். இந்த உணவுகளை தனியார் என்ஜிஓக்கள் தயார் செய்து வழங்கி வந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.