பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள சிறப்பு அம்சங்கள்..!

பிரதமர் மோடி நேற்று புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்தார். இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1250 கோடி. 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும். மிர்சாபூர் கம்பளம், நாக புரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிவப்பு – வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் இருந்தும், கேஷரியா பச்சை நிற கற்கள் உதய்ப்பூரில் இருந்தும், சிவப்பு நிற கிரானைட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை நிற மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், ஜல்லிக் கற்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேற்கூரைக்கான எஃகு டாமன் டையூவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. பித்தளை வேலைகள் குஜராத்திலும், மேசை, இருக்கைகள் செய்யும் பணி மும்பையிலும் நடந்துள்ளது. அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டுள்ளன.

அரியானாவில் தயாரிக்கப்பட்ட எம்-சாண்ட் மணல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டது. சிமெண்ட் கற்கள் அரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து வர வழைக்கப்பட்டுள்ளன.

2020 டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.