தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… இன்னும் 6 மாதத்தில்… அமைச்சர் கே.என்.நேரு!

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெற்றதும் கிடைக்கும் பணப் பலன்கள் தொடர்பான விவகாரம் தொடர்ந்து இழுபறியாகி வருகிறது. இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் மூலம் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணப் பலன்கள் பெறுவதில் கால தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் தான் அமைச்சர்

மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆப்சன்ட் முறையை கைவிடக்கோரி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

போக்குவரத்து ஊழியர்கள் ஹேப்பி

அதாவது, போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து பணப் பலன்களும் கிடைக்கும். இது அடுத்த 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சேலம் ஜான்சன்பேட்டை பணிமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கே.என்.நேரு இவ்வாறு தெரிவித்தார். இதில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டன.

சேலத்தில் அரசு நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். இதில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தை முத்தமிழறிஞர் கலைஞர்

உருவாக்கினார். 1971ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த போது, அதனை பொது உடைமையாக்கி அனைவருக்குமான சேவையாக மாற்றினார். மீண்டும் கலைஞர் முதலமைச்சராக இருந்த 1990ஆம் ஆண்டு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 80 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கலைஞர் ஆட்சியில்

இவை அனைத்தையும் நிறைவேற்றி தந்தார். 2006 – 2011 காலகட்டத்தில் போக்குவரத்த் துறையில் 15,000 புதிய பேருந்துகளை கலைஞர் வாங்கினார். இந்த காலகட்டத்தில் சுமார் 60 ஆயிரம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டனர். சேலத்திற்கு மட்டும் 5,600 ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

ஸ்டாலின் உத்தரவு

இந்த சூழலில் அரசு போக்குவரத்து கழகங்களில் கடந்த மே 2020 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 8,361 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட 1582.44 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பலன்களை வழங்க தற்போதைய முதலமைச்சர்

உத்தரவிட்டுள்ளார்.

ஜான்சன்பேட்டை பணிமனை

மேலும் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின் போது, துறை சார்ந்த அமைச்சர் அறிவித்ததன் அடிப்படையில் சேலம் போக்குவரத்துக் கழகத்தில் ஒருங்கிணைந்த ஜான்சன்பேட்டை பணிமனை வளாகத்தில், 798 சதுர அடி பரப்பில் பணியாளர்களுக்கான ஓய்வறை குளிரூட்டப்பட்டுள்ளது. இதை ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பயன்படுத்த ஏதுவாக மாற்றி திறந்து வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.