துல்கர் சல்மான் படத்தை தயாரிக்கும் பாகுபலி நடிகர்
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது மற்றொரு புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, தமிழ், தெலுங்கு என இரு மொழியில் உருவாகும் இந்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தனது ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உள்ள முக்கியமான நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். இந்த படத்தை குறித்து துல்கர் சல்மான் பிறந்தநாள் ஜூலை 28 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.