இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். செரோயு, என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்கள், விமானம் மூலம் மந்ரிபுக்ரி என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement