சென்னை: Adipurush (ஆதிபுருஷ்) ஆதிபுருஷ் படத்துக்கு அனுமருக்காக ஒரு சீட் ஒதுக்கப்பட்டிருக்கும் சூழலில் உலக அளவில் எந்தெந்த படங்களுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த வரலாறு.
பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படம் உருவாகியிருக்கிறது. ஜூன் 16ஆம் தேதி தமிழ்,தெலுங்கும், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சைஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கின்றன.
ட்ரோலை சந்தித்த ஆதிபுருஷ்: இந்தச் சூழலில் இன்று காலை படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி படம் வெளியாகும் திரையரங்கில் அனுமருக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என தெரிவித்தது. இந்த அறிவிப்பு இன்று காலை முதல் நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் உலக அளவில் எந்தெந்த திரைப்படத்துக்கு ஒரு சீட் யாருக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான வரலாறு இதோ
தி பேட் மேன் (2022): டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோ படம்தான் பேட்மன். பேட்மேனுக்கென்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அந்த பேட்மேன் படங்களின் வரிசையில் தி பேட்மேன் படம் கடந்த மார்ச் 2022ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி வெளியானது. அந்தப் படம் வெளியானபோது சாட்விக் போஸ்மெனுக்கென்று ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டது. சாட்விக் போஸ்மென் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் ப்ளாக் பாந்தர் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் கன்: மாவெரிக் (2022): உலகளவில் டாப் கன் பட வரிசையும் வெகு பிரபலம். அந்த வரிசையில் டாம் க்ரூஸ் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் டாப் கன் மாவ்ரிக் வெளியானபோது கெல்லி மெக் கில்லிஸ் என்ற நடிகைக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டது. கெல்லி மெக் கில்லிஸ் 1986ஆம் ஆண்டு வெளியான டாப் கன்னில் சார்லி என்ற கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸூடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி லாஸ்ட் சிட்டி (2022): பிராட் பிட், பேட்டி ஹாரின்ஸன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் தி லாஸ்ட் சிட்டி. அந்தப் படம் வெளியானபோது ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகை பெட்டி வைட்டுக்கென்று திரையரங்குகளில் ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டது. தி லாஸ்ட் சிட்டி படத்தில் அவர் கேமியோ ரோலில் கலக்கியிருந்தார். பெட்டி வைட் கடந்த 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி பேட் காய்ஸ் (2022): குழந்தைகளுக்கு விருப்பமான அனிமேஷன் ஜானரில் உருவான படம் தி பேட் காய்ஸ். கடந்த 2022ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது ஜேம்ஸ் காங்கிற்கு திரையரங்குகளில் ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டது. சீனாவை பூர்வீகமாகக் கொண்ட ஜேம்ஸ் காங் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும், அனிமேஷன் படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
லைட் இயர் (2022): டாய் ஸ்டோரி ஜானரில் உருவான லைட் இயர் அனிமேஷன் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. படத்தை டிஸ்னி தயாரித்திருந்தது. இந்தப் படம் ரிலீஸானபோது பால் நியூமேனுக்கு இருக்கை ஒன்று ஒதுக்கப்பட்டது. பால் நியூமேன் அடிப்படையில் ஒரு ராணுவ வீரர் ஆவார். அவர் இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்டவர். பின்பு இயக்குநராகவும், நடிகராகவும் ஜொலித்தார். குறிப்பாக டிஸ்னி தயாரிப்புகளில் அவர் முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்தார். மேலும் ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளையும் அவர் வென்றிருக்கிறார்.