Cook with Comali 4 : சிவாங்கிக்கு சொம்பு தூக்குறோமா? டென்ஷன் ஆன வெங்கடேஷ் பட்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி நேரடியாக பைனலுக்கு தேர்வாகி உள்ளதால் சமைக்கவே தெரியாதவர் எப்படி பைனலுக்கு வந்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

இதுவரை மூன்று சீசன்கள் முடிந்த நிலையில் ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில், தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

பிடித்த நிகழ்ச்சி : குக் வித் கோமாளி சீசன் 4யில் நிகழ்ச்சியில் இந்த முறை 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறியுள்ளார். இவருடன் நடிகை சிருஷ்டி டாங்கே, பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியா என பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

கோமாளிகள் : கோமாளிகளாக முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேசி, சுனிதா, மணிமேகலை, தங்கதுரை ஆகியோர் உடன் புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிஷ சிவா, ஓட்டேரி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை கிஷோர், ராஜா ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையன் என 5 போட்டியாளர்கள் இதுவரை வெளியேறி உள்ளனர்.

Venkatesh Bhat explains about sivaangi becoming a Finalist in cook with comali 4

சிவாங்கி தேர்வு : இந்த வாரம் நடைபெற்ற இம்யூனிட்டி ரவுண்ட்டில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் நேரடி பைனல் போட்டியாளராக சிவாங்கி தேர்வாகியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 5 பேர் பைனலிஸ்டாக பங்கேற்கவுள்ள நிலையில், அடுத்தடுத்து 4 போட்டியாளர்கள் குறித்து அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொம்பு தூக்குறாங்க : சிவாங்கி பைனலுக்கு தேர்வாகி உள்ளதற்கு இணையத்தில் பலவிதமான நெகடிவ் கருத்து பரவி வருகிறது. நல்ல சமைக்க தெரிந்தவர்கள் பலர் இருக்கும் போது, சிவாங்கிக்கு மட்டும் சொம்பு தூக்குறாங்க என்ற கருத்து பரவி வருகிறது. இணையத்தில் பரவும் இந்த கருத்தால் டென்ஷனான செஃப் வெங்கடேஷ் பட், நானும் சிவாங்கியும் அப்பா பொண்ணுமாதிரி பழகினாலும், அது எல்லாம் கேமுக்கு வெளியில் தான்.

சலுகை இல்லை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை யாருக்கும் எந்தவிதமான சலுகை காட்டுவது இல்லை. அவர்கள் சமைக்கும் உணவு நன்றாக இருந்தால் மட்டுமே பைனலுக்கு போவாங்க, அவங்க மட்டும்தான் வெற்றியாளராக இருப்பார்கள் என்று செஃப் வெங்கடேஷ் பட் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.