சர்க்கரை நோயால் 'வாம்மா மின்னல்' புகழ் நடிகரின் கால் கட்டை விரல் அகற்றம்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லிங்குசாமியின் ஆனந்தம், சரத்குமாரின் அரசு, சூர்யாவின் சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவையாக நடித்திருக்கிறார் பாவா லட்சுமணன். வைகை புயல் வடிவேலு, சந்தானம் ஆகியோருடன் சேர்ந்து நகைச்சுவை செய்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்
ஆர்.பி. சவுத்ரியின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்தவர் பாவா லட்சுமணன். சரத்குமாரின் மாயி படத்தில் வடிவேலுவுக்கு பெண் பார்க்க செல்லும்போது வாம்மா மின்னல் என பாவா லட்சுமணன் பேசிய வசனம் இன்றளவும் பிரபலம்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை அளவு அதிகமான காரணத்தினால் அவரின் கால் கட்டை விரலை மருத்துவர்கள் அகற்றியிருக்கிறார்கள்.

வடிவேலு பற்றி பாவா லட்சுமணன் அண்மையில் பேட்டி கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது,

முன்பை போன்று பட வாய்ப்புகள் வருவது இல்லை. உழைக்க உடம்பில் தெம்பும் இல்லை. தற்போது ஓடிடிக்கு முக்கியத்துவம் வந்துவிட்டதால் என்னை மாதிரியான ஆட்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பணம் தான் வருமானம்.

2 முறை அபார்ஷன், நான் செஞ்ச காரியம் தான் காரணமோனு புலம்பினேன்: அஜித், விஜய் பட ஹீரோயின்

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டபோது நான் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். அதை பார்த்து நடிகர் சந்தானம் உள்ளிட்ட பலரும் போன் செய்து விசாரித்தார்கள். ஆனால் நடிகர் வடிவேலு மட்டும் போன் பண்ணவே இல்லை என்றார்.

சர்க்கரை வியாதிக்கு மாத்திரை வாங்கி சாப்பிடக் கூட காசு இல்லாமல் அல்லாடுவதாக தெரிவித்தார் பாவா லட்சுமணன். அவர் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரசிகர்களை சிரிக்க வைத்த பாவா லட்சுமணனுக்கு இப்படியொரு பரிதாப நிலையா?. அவரின் சிகிச்சைக்கு திரையுலக பிரபலங்கள் உதவி செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியில் இருந்து பார்க்கத் தான் சினிமா துறை பிரமாண்டமாகத் தெரிகிறது. ஆனால் அங்கிருக்கும் சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் கஷ்டப்படத் தான் செய்கிறார்கள். பாவா லட்சுமணன் போன்ற நடிகர்கள் அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் இருக்கிறார்கள். என்ன சினிமா உலகமடா இது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.