தேச நலனுக்காக எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் – உத்தவ் தாக்கரே 

மும்பை: தேச நலனுக்காக எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் என்று சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு முன்பாக தாக்கரே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனா (யுடிபி) வின் கட்சிப் பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியும், சந்திர சேகரராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரீய சமிதியும் தேசிய அளவிலான நோக்கங்களைக் கொண்டுள்ளன என்றாலும் அது மறைமுகமாக பிரதமர் மோடிக்கும், சர்வாதிகாரத்துக்கும் உதவி செய்யும். இந்த இரண்டு கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் பல்வேறு மாநிலங்களில் நேரடியாக போட்டியிடுகின்றன. கேஆர்எஸின் பாரத் ராஷ்டிரீய சமிதி கட்சி மகாராஷ்டிராவில் கால்பதிக்கும் நோக்கத்துடன் பல்வேறு பேரணிகளை நடத்துகின்றன.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரும் ஜனநாயகம் பிழைக்க வேண்டுமென்றால், தலைவர்கள் தேசநலனுக்காக தாராள மனதுடன் செயல்பட வேண்டும். அப்படி அனைவரும் ஒன்றிணைந்தால், வாக்காளர்களிடம் புது நம்பிக்கை வெளிப்படும்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அழைப்பின் பெயரில் ஒரு கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர், மேற்குவங்க முதல்வர், தமிழக முதல்வர், ஜார்கண்ட் முதல்வர், தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டத் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

எந்த வகையிலாவது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க மோடி முயற்சியாக இருக்கும். 450 இடங்களில் பாஜகவுடன் நேரடியாக போட்டியிட்டால் அக்கட்சியை நிச்சம் தோற்கடிக்க முடியும். தந்திரங்கள் செய்த போதிலும் மோடியை வீழ்த்த முடியும் என்று பல மாநிலங்கள் நிரூபித்திருக்கின்றன.

சட்டம், அரசியல் சாசனம், நீதித்துறையின் மீது நம்பிக்கையில்லாத ஆட்சியாளர்களை எதிர்க்கட்சிகள் பாட்னா கூட்டத்தில் தீவிரமாக ஆலோசித்து வீழ்த்த முடியம். பாட்னாவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்று கூடுகின்றன என்று சொல்வதே தவறு. நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றும் தேசபக்தியுள்ள கட்சிகளின் கூட்டம் என்ற கூற வேண்டும்.

நாடு சர்வாதிகாரத்தின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் ஜனநாயகமும் சுதந்திரமும் பேராபத்தில் உள்ளன. மோடியும் அவரது கட்சியினரும் மத்திய அமைப்புகளை பயன்படுத்து எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். இவை சர்வாதிகாரத்தின் அறிகுறிகளாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.