வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி பணமோசடி செய்வது தொடர்பாக விசேட விசாரணை

தனது தனிப்பட்ட ஊழியர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக விசேட விசாரணையொன்று மேற்கொள்ளப்படுவதாகவும், அத்தகைய நபர்களுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும், ஒப்பந்தங்களுக்கு தாம் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல எனறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

தனது அலுவலகத்தில் இருக்கும் எந்தவொரு அதிகாரியும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு போதும் பணம் அறவிடுவதில்லை என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக தொழிலாளர்களை பரிந்துரைக்கும் சட்டப்பூர்வமான அதிகாரம், அதிகாரமளிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மாத்திரமே தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்குப் பரிந்துரை செய்ய முடியும். அதை விடுத்து எந்த தனிநபர்களாலும் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு பரிந்துரை செய்ய முடியாது, அது போல வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயற்பாடாகும்.

அமைச்சரின் பணியக ஊழியர்கள் என்று கூறிக்கொண்டு வெளிநாட்டு வேலைக்காக பணம் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவரும் அமைச்சரின் தனிப்பட்ட ஊமியர்கள் அல்ல என்பதுடன், அசை;சரின் தனிப்பட்ட பணியக ஊழியர்கள் கீழே குறிப்பிட்டுள்ளவர்கள் மாத்திரமே என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு. ஷான் யஹம்பத் – தனிப்பட்ட செயலாளர்
திரு.சஞ்சய் நல்ல பெரும – ஊடக செயலாளர்
திரு தேசப்பிரிய லியனகே – ஒருங்கிணைப்புச் செயலாளர்
திரு.பாக்ய காரியவசம் – ஒருங்கிணைப்புச் செயலாளர்
திரு. சுனேத் அத்துகோரல – மக்கள் தொடர்பு அதிகாரி
திரு உதயங்க சூரியராச்சி – பாராளுமன்ற அலுவல்கள் செயலாளர்
பிரியங்கர விஜேசேகர – இணைப்பு அதிகாரி (பாராளுமன்ற ஊழியர்)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.