பாரிஸ், பிரான்சில், தினமும் உணவில் போதை மருந்து கலந்து, மனைவியை 10 ஆண்டுகளாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணவன் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐரோப்பிய நாடான பிரான்சின், மசான் என்ற பகுதியைச் சேர்ந்தவர் டொமினிக்.
இவரது மனைவி பிராங்காயிஸ். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகும் நிலையில், மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், 2011 – 20 வரையிலான காலத்தில், தினமும் இரவில், பிராங்காயிசுக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து, அவருக்கே தெரியாமல், டொமினிக் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.
இந்த சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதை அடுத்து, இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், டொமினிக் உட்பட 50 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
‘லோராசெபம்’ என்ற போதை மருந்தை, 10 ஆண்டுகளாக, இரவு நேரத்தில் உணவில், பிராங்காயிசுக்கு, டொமினிக் கலந்து கொடுத்துள்ளார்.
இதன் பின், ஒவ்வொரு நபர்களையும் அழைத்து, தன் மனைவியை அவருக்கே தெரியாமல், அவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.
இப்படி, 90க்கும் மேற்பட்டோர் பிராங்காயிசை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை, டொமினிக் வீடியோவும் எடுத்துள்ளார்.
பிராங்காயிசுக்கு நினைவு திரும்பாமல் இருக்க, வீட்டிற்கு வரும் நபர்களிடம், வெந்நீரில் கைகளை கழுவும்படியும், சமையலறையில் ஆடைகளை கழற்றும்படியும் டொமினிக் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வராமலிருக்க, வாகனங்களை அருகில் உள்ள பள்ளி அல்லது மறைவான இடத்தில் நிறுத்தும்படி அவர் கூறி உள்ளார்.
இது தொடர்பாக, 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டொமினிக் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கணவரால் தான் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த பிராங்காயிஸ், விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்