வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலக்காடு: ரேடியோ ஒலிபரப்பு திறன் குறைபாடு தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரேடியோ கேட்போர் சங்கம் பிரதமருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பிரசார் பாரதியின் கீழ் செயல்படும் மஞ்சேரி எப்.எம்., ரேடியோ ஸ்டேஷன் கோழிக்கோடு ரேடியோ ஸ்டேஷன் ஆகியவற்றின் ஒலிபரப்பு திறன் குறைபாட்டால் மக்களிடம் சரியாக சென்றடைவதில்லை.
இத்திறனை அதிகரிக்க வேண்டும் என ரேடியோ கேட்போர் சங்கம் சார்பில் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினர்.
பிரதமர் அலுவலகம் இக்கடிதத்தை பிரசார் பாரதிக்கு அனுப்பியது.
இதை பரிசீலனை செய்த அதிகாரிகாரிகள் இரு ரேடியோ ஸ்டேஷன்களின் திறனை உயர்த்த வாய்ப்பில்லை என்றும் மொபைல் ஆப் இன்டர்நெட் போன்ற மாற்று வசதிகளை பயன்படுத்தி ரோடியோ ஸ்டேஷன் நிகழ்ச்சிகளை கேட்டு கொள்ளலாம் என பதில் அளித்துள்ளது.
![]() |
பிரதமரின் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியை கேட்க முடிவதில்லை. இதனால் அதிருப்தியடடைந்த ரேடியோ கேட்போர் சங்கத்தினர் சரிவர ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் மலப்புரம் மாவட்ட பொதுச்செயலாளர் பிரமோத்குமார் கூறியதாவது:
பாலக்காடு மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் துவங்கப்பட்ட ரேடியோ ஸ்டேஷன் மஞ்சேரி எப்.எம்., ஒளிபரப்பு திறன் 3 மெகாவாட் மட்டுமே உள்ளதால் மலப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டுமே ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் கேட்க முடிகிறது. அதேபோல் கோழிக்கோடு ரோடியே ஸ்டேஷனிலும் பிரச்சினை உள்ளது. இதற்கு தீர்வு காண ஒலிபரப்பு திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என, பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை- எளிய மக்களுக்கு மொபைல் ஆப் இன்டர்நெட் போன்ற வசதிகளை பயன்படுத்த தெரியாது. முதியோர் பார்வையற்றோர் நோயாளிகள் வன எல்லையோர குடிமக்கள் ஆகியோருக்கு இதுபோன்ற வசதிகளை பயன்படுத்துவது மிகவும் சிரமம். இதற்கு பிரசார் பாரதி நிறுவனம் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement