வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றியது பெருமை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அமெரிக்க பார்லிமென்டில் உரையாற்றியது பெருமை அளிக்கிறது. கூட்டத்தில் அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி. உங்களின் பங்கேற்பு, இந்தியா அமெரிக்கா உறவுகளின் வலிமையையும், சிறந்த எதிர்காலத்திற்கான எங்களது பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் குறிக்கிறது. உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பு தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி கூறியுள்ளார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement