Leo: லியோ இசை வெளியீட்டு விழா..விஜய்யின் குட்டி ஸ்டோரி இதுதானா ? தரமான சம்பவம் லோடிங்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நேற்றைய தினம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இருந்து போஸ்டரும், நா ரெடி என்ற பாடலும் வெளியானது. இந்த இரண்டுமே விஜய் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாகவே ஈர்த்தது. குறிப்பாக நா ரெடி பாடல் செம வைபாக இருப்பதாக அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அப்பாடலை விஜய்யே பாடியது கூடுதல் சிறப்பம்சமாக இருக்கின்றது. 2000 நடன கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட இப்பாடல் திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பதாகவும் இருக்கின்றது. ஆனால் மறுபக்கம் ஒரு சில சர்ச்சைகளும் இப்பாடலால் கிளம்பியுள்ளது.

விஜய்யின் குட்டி ஸ்டோரி

அதாவது நா ரெடி பாடலில் விஜய் புகைபிடிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருப்பது தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணமாக இருக்கின்றது. இது ஒருபக்கம் இருக்க தற்போது அனைவரது பார்வையும் லியோ படத்தின் இசை வெளியீட்டின் மீது தான் இருக்கின்றது. குறிப்பாக விஜய் சொல்லும் குட்டி ஸ்டாரிக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Naa Ready: போஸ்டர் அடி..அண்ணன் ரெடி..ஒரே பாடலில் ஒட்டுமொத்த கதையையும் சொன்ன லோகேஷ் கனகராஜ்..!

பொதுவாக விஜய் தன் இசை வெளியீட்டு விழாவில் ஏதேனும் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த கதையில் சிறிதளவு அரசியலையும் கலந்து விஜய் அந்த குட்டி ஸ்டோரியை ரசிகர்களிடம் கூறுவார்.

மேலும் தற்போது விஜய் தன் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கின்றார். சமீபத்தில் கூட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எந்த மாதிரியான குட்டி ஸ்டோரியை ரசிகர்களுக்கு கூறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அந்த வகையில் விஜய் ஒவ்வொரு முறையும் குட்டி ஸ்டோரி சொல்லும்போது அந்த படத்தின் கதைக்களத்தை மையமாக வைத்து அதை சார்ந்த கதையை அரசியல் கலந்து கூறுவார். அதுபோல் லியோ படத்தின் கதைக்களத்தை மையமாக வைத்து தான் விஜய் இம்முறை தன் குட்டி ஸ்டோரியை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மேலும் இம்முறை அக்கதையில் அரசியல் சற்று தூக்கலாகவே இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பாகவே இருக்கின்றது. எனவே அக்டோபர் மாதம் நடைபெறும் லியோ இசை வெளியீட்டு விழா பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றே தெரிவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.