சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
விஜய்யின் லியோ விக்ரம் படத்தின் முந்தைய பாகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
விக்ரம் பட க்ளைமேக்ஸில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை அறிமுகப்படுத்தினார் லோகேஷ்.
இந்த ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதனை ப்ளு சட்டை மாறன் ட்ரோல் செய்து ட்விட் போட்டுள்ளார்.
சூர்யாவை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்
ஒரே ஒரு சீன்ல சட்டைல தக்காளி சட்னி ஊத்திகிட்டு, கசாப்புக்கடை கத்தியோட வந்ததுக்கு எல்லாம்… ரோலக்ஸ் ரோலக்ஸ்னு ஃபயர் விடுறீங்களே… pic.twitter.com/6Ae5fHqldr
— Blue Sattai Maran (@tamiltalkies) June 23, 2023
மாநகரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ், இன்று இந்திய திரையுலகையே மிரட்டி வருகிறார். கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் மூலம் LUC எனப்படும் தனி யுனிவர்ஸ் கிரியேட் செய்து மாஸ் காட்டி வருகிறார். இதனால் லோகேஷ் இயக்கும் படங்கள் மட்டுமில்லாமல் அவர் உருவாக்கும் கேரக்டர்களும் அதிக கவனம் ஈர்த்து வருகின்றன.
அதன்படி, கைதி டில்லி, மாஸ்டர் ஜேடி வாத்தி, விக்ரம் படத்தில் கோஸ்ட், அமர் ஆகிய கேரக்டர்களுடன் சூர்யாவின் ரோலக்ஸும் ரசிகர்களிடம் செம்மையாக ரீச் ஆனது. விக்ரமில் சூர்யா நடித்துள்ளார் என்பதே படம் ரிலீஸாகும் போதுதான் தெரியவந்தது. அதேபோல், விக்ரம் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டலாக அறிமுகமான சூர்யாவுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
லோகேஷின் LCU யுனிவர்ஸில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் தான் வில்லனாக இருக்கும் என தெரிகிறது. இதனால், விஜய்யின் லியோ படத்திலும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல், லோகேஷ் இயக்கவுள்ள கைதி 2ம் பாகத்திலும் டில்லி VS ரோலக்ஸ் மோதல் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளு சட்டை மாறன்.
இதுகுறித்து டிவிட் போட்டுள்ள ப்ளு சட்டை மாறன், “ஒரே ஒரு சீன்ல சட்டைல தக்காளி சட்னி ஊத்திகிட்டு, கசாப்புக்கடை கத்தியோட வந்ததுக்கு எல்லாம்… ரோலக்ஸ் ரோலக்ஸ்னு ஃபயர் விடுறீங்களே… உங்களுக்கெல்லாம் இதயமே இல்லியா” என கவுண்டமணி போஸ்டருடன் கலாய்த்துள்ளார். சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டருக்கு ரசிகர்களிடம் எந்தளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ, அதேபோல் பல விமர்சனங்களையும் சந்தித்தது.
சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை சினிமாத்தனமாக லோகேஷ் காட்டியுள்ளார் எனவும், வசூலுக்காக அவரை இப்படி டெரர் லுக்கில் நடிக்க வைத்தது அபத்தம் என விமர்சனங்கள் எழுந்தன. கையில் கத்தியுடன் என்ட்ரி கொடுப்பதும், நினைத்தவுடன் ஒருவனின் தலையை வெட்டுவதும் தான் ரியலான ஹீரோயிசமா என்றும் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதையெல்லாம் வைத்தே ப்ளு சட்டை மாறன் இப்படி ட்விட் போட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ப்ளு சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு சூர்யா ரசிகர்களிடம் இருந்து ரோலக்ஸ் ரக ரியக்ஷன்கள் குவிந்து வருகின்றன.