சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வந்தது. பெரும் பொருட் செலவில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்தப்படத்தின் ஷுட்டிங் ஒத்திகையின் போது விக்ரமிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் முழு ஓய்வில் இருந்தார் விக்ரம். இதனையடுத்து ஷுட்டிங்கை ஒத்தி வைத்தனர் படக்குழுவினர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஓய்விலிருந்த விக்ரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வரும் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
Hansika: உடல் எடையை குறைக்க ஆபரேஷனா.?: ஹன்சிகா என்ன சொல்லிருக்காங்க பாருங்க.!
இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக நிறைவு செய்துள்ள நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘அண்மையில் எனது நெருங்கிய நண்பர் ஒரு வாசகத்தை அனுப்பினார். ‘தங்கலான்’ படத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தை ஒரே வரியில் சிறப்பாக கூற இதை விட ஒரு வாசகம் கிடைக்காது. பணம், புகழ், காதல் இவற்றை தவிர எனக்கு உண்மையை தாருங்கள்.
View this post on InstagramA post shared by Parvathy Thiruvothu (@par_vathy)
‘தங்கலான்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக நான் தேர்ந்தெடுத்த விஷயங்கள், நான் சென்ற இடங்கள். எனக்குள் எழுப்பியிருந்த சுவர், முகத்திரைகளை சுக்குநூறாக உடைத்து கடைசியில் உண்மையை மட்டும் எஞ்ச வைத்தது. இப்படம் எனக்கு மிகவும் முக்கியமான திருப்பத்தை கொடுத்துள்ளது’ என பதிவிட்டுள்ளார் பார்வதி. ‘தங்கலான்’ படம் கோலார் தங்க வயல் பின்னணியில், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Maamannan: ‘மாமன்னன்’ படத்தை பார்த்த கமல்: வெளியான முதல் விமர்சனம்.!