மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விஸ்தாரா பயணியர் விமானம் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு புதுடில்லி புறப்பட தயாராக இருந்தது.
அப்போது, 23 வயது பயணி ஒருவர், தன் மொபைல் போனில், விமானத்தை சற்று நேரத்தில் கடத்தப் போவதாகவும், அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது என்றும் யாரிடமோ பேசியுள்ளார்.
இதை, அருகில் இருந்து கேட்ட சக பயணியர் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, பாதுகாப்பு படையினரை வரவழைத்து, அந்த இளைஞரை ஒப்படைத்தனர். பின், விமானம் முழுதும் பரிசோதனை செய்த பின், மற்ற பயணியருடன் இரவு 7:00 மணியளவில் புதுடில்லிக்கு புறப்பட்டது.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர் ஹரியானாவைச் சேர்ந்த ரிதேஷ் ஜுனேஜா என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement