புதுடில்லி: அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் ( ஜூலை 12-16, 20-24), மூன்று ஒருநாள் (ஜூலை 27, 29, ஆக.,1) மற்றும் ஐந்து ‘டி-20’ (ஆக.,3, 6, 8, 12, 13) போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி இன்று (ஜூன் 23) அறிவிக்கப்பட்டது.
ஒருநாள் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருத்ராஜ் கெய்க்வாட், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அக்சர் படேல், சகால், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருத்ராஜ் கெய்க்வாட், விராட் கோஹ்லி, ஜெய்ஸ்வால், ரகானே, கே.எஸ்.பரத், இஷான் கிஷன், அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement