
கிங் ஆப் கோதா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் துல்கர் சல்மான் தற்போது இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜஸ்வர்யா லஷ்மி, பிரசன்னா, சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். பிரீயட் படமாக உருவாகும் இந்த படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கேரக்டர் அறிமுக வீடியோ வெளியானதை தொடர்ந்து வருகின்ற ஜூன் 28ம் தேதி அன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இதில் துல்கர் சல்மான் 'ராஜா' என்ற கேரக்டரில் நடிக்கிறார். ஓணம் பண்டிகைக்கு படம் திரைக்கு வர உள்ளது. மலையாளத்தில் தயாராகி உள்ள படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.