வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடியின் போட்டோவை முன்னாள் டபிள்யூடபிள்யூஇ சாம்பியன் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் அது லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் அவர் எதற்காக பிரதமர் மோடியின் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டர் என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். முதல் நாளில் ஐநா தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தினத்தின் யோகா கொண்டாட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். அதன்பிறகு வாஷிங்டனில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடனை வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி சந்தித்தார். அதன்பிறகு இருவரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு குழுவில் அவர் உரையாற்றினர். பின்னர் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு டின்னர் வழங்கப்பட்டது.
இதையடுத்து நேற்று பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்த பிரதமர் மோடிக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் மதிய உணவு வழங்கினார். இதையடுத்து 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து எகிப்து புறப்பட்டு சென்றார். முன்னதாக அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு இந்தியா வம்சவாளியினர், அமெரிக்க அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் போட்டோவை முன்னாள் டபிள்யூடபிள்யூஇ சாம்பியன் ஜான் சீனா திடீரென்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோபைடனும் உள்ளார். இந்த போட்டோவை வெளியிட்ட ஜான் சீனா அதில் எதையும் குறிப்பிடவில்லை.
இருப்பினும் அவர் அந்த போட்டோவை வெளியிட்டதன் பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது. அதாவது அதிபர் ஜோபைடனும் பிரதமர் மோடி இருக்கும் போட்டோவை உற்று கவனித்தால் உண்மை தெரியும். அதாவது போட்டோவில் பிரதமர் மோடி தனது ஒரு கையை எடுத்து விரல்களை முகத்தின் பக்கத்தில் விரித்து வைத்துள்ளார். இது பார்க்க டபிள்யூடபிள்யூஇ-ல் ஜான் சீனா இருந்தபோது அவர் காட்டம் சிக்னேட்சர் சிம்பல் போல் உள்ளது.
இதனால் தான் அந்த போட்டோவை ஜான் சீனா பதிவிட்டுள்ளார். ஜான் சீனாவின் இந்த பதிவுக்கு இன்று மாலை 6.20 மணி நிலவரப்படி 4 லட்சத்து 45 ஆயிரத்த 890 லைக்ஸ்கள் விழுந்து இருந்தன. மேலும் 6780 பேர் கமெண்ட்டுகள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்சீனா WWE மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார்.
2022ல் டபிள்யூடபிள்யூஇ-ல் நுழைந்த ஜான் சீனா தனது தனித்துவமான திறமையால் எதிராளியை துவம்சம் செய்வார். குறிப்பாக உடல் பருமன் மிக்க பிக்சோ, மார்க் ெஹன்றி தனது தோளில் தூக்கி மேடையில் பொத்தென வீசுவதை பார்த்து கைத்தட்டாத ரசிகர்கள் இருக்கவே முடியாது. மேலும் சூப்பர்ஸ்டார்களாக ஜொலித்த தி ராக், ட்ரிபிள் எச், அன்டர் டைகர் உள்பட பல முன்னணி வீரர்களை வென்று காட்டி இருந்தார். WWWவில் 16 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜான் சீனா ஹாலிவுட் சினிமாவில் கால்பதித்து நடிகராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.