ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி : தொடக்க ஆட்டத்தில் கனடா அணியுடன் மோதும் இந்தியா

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை 2023-ஐ கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக எப்ஐஎச் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாட உள்ளது.இந்த தொடர் சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோ நகரில் நடக்கிறது.

இந்த போட்டி நவம்பர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 10-ந் தேதி முடிகிறது. எப்ஐஎச் ஜூனியர் மகளிர் உலக கோப்பை 2023-ல் தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. நவம்பர் 29 அன்று கனடாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி, அதற்கு அடுத்ததாக நவம்பர் 30-ந் தேதி ஜெர்மனியுடன் விளையாடுகிறது. டிசம்பர் 2-ம் தேதி நடைபெறும் கடைசிபோட்டியில் பெல்ஜியத்துடன் இந்திய பெண்கள் விளையாட உள்ளனர். உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி டிசம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.