ஹைதராபாத்: தனது குழந்தையை பார்க்க வந்த நடிகர் ராம்சரண் அணிந்திருந்த வாட்சின் விலை என்ன தெரியுமா?
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண். இவருக்கம் அப்பல்லோ நிர்வாக இயக்குநர் பிரீத்தா ரெட்டியின் மகள் உபாசனாவுக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் உபாசனா கர்ப்பமடைந்தார். இவர்கள் ஐவிஎஃப் முறையில் கரு உருவானதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் உபாசனாவுக்கு ஜூன் 20ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதற்காக ரசிகர்கள் பலர் ராம்சரண் தம்பதிக்கும் தாத்தாவான சிரஞ்சீவிக்கும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். ஏற்கெனவே மகள் வயிற்று பேரனுடன் விளையாடி வரும் நிலையில் தற்போது மகன் சார்பாக பேத்தி பிறந்துவிட்டாள். இனி சிரஞ்சீவிக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
குழந்தையையும் உபாசனாவையும் பார்க்க அல்லு அர்ஜுன், நிஹாரிகா, பவன் கல்யாண் உள்ளிட்டோர் நேரில் பார்த்து வருகிறார்கள். குழந்தை பிறந்த பின்னர் சிரஞ்சீவி கூறுகையில் ராம்சரண் , உபாசனாவை பெற்றோர்களாக காண நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். எங்கள் வேண்டுதல் பல ஆண்டுகளுக்கு பிறகு இறைவன் நிறைவேற்றி இருக்கிறார்.
ராம் சரண் தந்தையானதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குழந்தை பிறப்பதற்கு முன்பே நல்ல அறிகுறிகள் தென்பட்டது. குழந்தையின் ராசி தான் ராம் சரண் அவரது தொழிலில் நல்ல வளர்ச்சியடைய காரணம் என சிரஞ்சீவி கூறினார். மேலும் தங்கள் குடும்பமே ஆஞ்சநேய பக்தர்கள். எங்கள் பேத்தியும் அவருக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை பிறந்துவிட்டார்.
தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்றார். குழந்தையும் உபாசனாவும் நேற்று வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆனார்கள். குழந்தையை கையில் ஏந்திய படி ராம் சரண் தன்னுடைய மனைவியுடன் வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. தங்கள் மகளை ராம் சரண் தூக்கிக் கொண்டு வரும் போது அவர் கையில் ஒரு வாட்ச் கட்டியிருந்தார். மணிக்கட்டில் அவர் கட்டியிருந்த வாட்சின் விலை ரூ 1.63 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.