திருப்பதி நேற்று வனத்துறையினரிடம் திருப்பதியில் சிறுவனைத் தாக்கிய சிறுத்தை சிக்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க கர்னூலைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர். திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது. செய்வதறியாமல் திகைத்த சிறுவனின் பெற்றோர், போலீசார் மற்றும் பக்தர்கள் தங்கள் செல்போன்களில் டார்ச் அடித்தபடி வனப்பகுதிக்குள் தேடிச்சென்றனர். சிறுவனின் அழுகுரலை வைத்து சுமார் […]
