
`சீனாவில் வூஹான் ஆராய்ச்சி நிலையத்திலிருந்துதான் கோவிட் தொற்று உருவானது என்பதற்கான நேரடி ஆதாரங்கள் இல்லை’ என அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கும் ‘எல் நினோ’ எனும் காலநிலை நிகழ்வு காரணமாக, உலகம் முழுவதும் தீவிர வானிலை, பொருளாதார மாற்றம் மற்றும் விவசாய சீர்குலைவு ஆகியவற்றின் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் கொடிய வைரஸ் உருவாகும் வாய்ப்பும் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மலேசிய அரசு ஃபேஸ்புக்கில் ஆபத்தான, விரும்பத்தகாத தகவல்களை மெட்டா நிறுவனம் நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறது.

மெக்சிகோவின் அடர்ந்த வனப்பகுதிகளில் பல ஆண்டுகள் பழைமையான மாயன் நகரமும், பிரமிடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மெக்சிகோவின் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மோடியின் அரசு பயணத்தின் விளைவாக அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய உறுதியளித்திருக்கின்றனர்.

ரஷ்யாவுக்கு எதிராகச் சக்திவாய்ந்த கூலிப்படை குழுவான வாக்னர் வளர்ந்திருக்கிறது. ரஷ்ய ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை ஏற்படுத்தப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் (SCEZ) இந்தியாவிற்கு ஒரு பிரத்தியேக இடத்தை வழங்குவதாக எகிப்து அரசு அறிவித்திருக்கிறது.

மோடி கலந்துகொண்டிருக்கும் அமெரிக்க நிகழ்ச்சியில், “தன் வாழ்க்கையில் இந்தியா மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் மில்லியன் கணக்கான மக்களை ஈர்த்திருக்கிறது” என்று அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்திருக்கிறார்.

கிரீஸில் கடந்த வாரம் ஏற்பட்ட படகு கவிழ்ந்த விபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 280 குடும்பங்கள் பலியாகினர். பாகிஸ்தானில் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்திய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் LGBTQ+ சமூகத்தினரை ஆதரிக்கும் விதமாக Pride Month உலக முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், ஐரோப்பாவில், இதற்கு எதிராகப் பல பொய்யான தகவல்களும், கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.