மோடியின் காலில் விழுந்த அமெரிக்க பாடகி… இந்திய தேசிய கீதத்தை பாடியது குறித்து உருக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு 5 நாள் அரசு முறை பயணத்தை மேற்கெண்டுள்ளார். கடந்த 21ஆம் தேதி அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்தியா – அமெரிக்கா இடையிலான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதேபோல் தனியார் நிறுவனங்களின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவில் ஜில் பைடனை சந்தித்து பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார். தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு வலி நிவாரணி.. இன்னும் ஐசியூவில்தான்.. மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்நிலையில் அமெரிக்காவில் 3 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. முன்னதாக பிரதமர் மோடி பங்கேற்ற அமெரிக்க அரசு முறை பயணத்தின் நிறைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் அமெரிக்க பாடகி மேரி மில்பென், இந்தியாவின் தேசிய கீதமான ஜனகனமன பாடலை பாடினார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வை வாஷிங்டன் டிசியில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டிடம் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தில், யுனைடெட் ஸ்டேட்ஸ் இந்தியன் கம்யூனிட்டி ஃபவுண்டேஷன் இதில்தான் பிரபல நடிகையும் பாடகியுமான மில்பென், இந்திய தேசிய கீதத்தைப் பாடினார்.

தாடியை எடுத்துட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பா… ராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் அட்வைஸ்!

ஆப்பிரிக்க-அமெரிக்க ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் இந்தியாவின் தேசிய கீதமான ஜனகன மன மற்றும் ஓம் ஜெய் ஜகதிசே ஹரே ஆகியவற்றைப் பாடியதற்காக மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதத்தை பாடியதை உயரிய கவுரமாகவும் பெருமையாகவும் நினைப்பதாக கூறியுள்ளர் மேரி மில்பென்.

மேலும் அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்கள் இரண்டும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் இலட்சியங்களைப் பேசுகின்றன எனவும் இதுவே அமெரிக்க-இந்திய உறவின் உண்மையான சாராம்சம் என்றும் ஒரு சுதந்திர தேசம் என்பது சுதந்திரமான மக்களால் மட்டுமே வரையறுக்கப்படுகிறது என்றும் மேரி மில்பென் பெருமையாக கூறினார்.

மூக்கும் முழியுமா… அசர வைக்கும் அக்ஷரா ரெட்டி… அசத்தல் போட்டோஸ்!

பிரதமர் மோடி கடந்த மே மாதம் பப்புவா நியூகினியா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப் மோடியின் கால்களை தொட்டு ஆசி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.