ரஷ்ய ராணுவ தலைமையிடத்தில் நுழைந்த வாக்னர் குழு.. ரஷ்யாவில் உச்சக்கட்ட பரபரப்பு! அடுத்து என்ன

மாஸ்கோ: உக்ரைன் போர் ஒரு பக்கம் தொடர இப்போது ரஷ்யாவில் உள்நாட்டிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கே தனியார் ராணுவமாக அறியப்படும் வாக்னர் குழு இப்போது ரஷ்யாவுக்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

உக்ரைன் போர் இப்போது ஒரு பக்கம் தொடரும் நிலையில், அங்கே மற்றொரு புதிய பிரச்சினையாகத் தனியார் ராணுவம் குழுவான வாக்னர் குழு புதினுக்கு சவால் விடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுக்கும் வகையில் வாக்னர் குழு கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. இதனால் அங்கே உள்நாட்டுப் போர் ஏற்படும் ஒரு சூழல் உருவாகியுள்ளது

வாக்னர் குழு ரோஸ்டோவ்-ஆன்-டானுக்கு தனது படைகளுடன் சென்றுள்ளார். இதனால் அங்கே பரபரப்பான ஒரு சூழல் உருவாகியுள்ளது. வாக்னர் குழு ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு அழைப்பு விடுப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. தங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகச் சாடிய வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின், இதனால் பலர் உயிரிழந்துள்ளதாகவும் விமர்சித்தார்.

பிராந்திய ராணுவ தலைமையிடம்: தனது ராணுவத்தில் 25 ஆயிரம் பேர் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைவரும் போரிட்டு உயிரிழக்கவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்த ரஷ்யாவுக்கு ராணுவத்திற்குப் பதிலடி கொடுக்கப் போவதாகவும் அறிவித்தார். ரஷ்யாவின் தெற்கு ராணுவ பிரிவின் தலைமையகம் இங்கே தான் உள்ளது. மேலும், சுமார் 10 லட்சம் பேர் இங்கே வசிக்கிறார்கள். அங்கே இருக்கும் பிராந்திய ராணுவ தலைமையிடத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் அறிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாங்கள் ராணுவ தலைமையகத்திற்குள் இருக்கிறோம்.. ரோஸ்டோவில் உள்ள ராணுவ தளங்கள், ஏரோட்ரோம் உட்பட ராணுவ பகுதிகள் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.. உக்ரைன் போருக்கு இங்கிருந்து தான் விமானங்கள் செல்லும்.. இதைத் தான் எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம்.. எங்கள் மீது ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு அவர்கள் உரியப் பதிலை அளிக்க வேண்டும்” என்றார்.

பரபர வீடியோ: ரோஸ்டோவில் உள்ள நிர்வாக கட்டிடங்கள், ராணுவ மையங்களில் வாக்னர் குழு இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வாக்னர் குழுவின் இந்த நடவடிக்கை உக்ரைன் போரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புதின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஷ்யாவைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்னர் குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளை இப்போது ரஷ்ய ராணுவம் எடுக்க ஆரம்பித்துள்ளது. மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் “பயங்கரவாத எதிர்ப்பு” நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாஸ்கோ மேயர் அறிவித்தார். ரஷ்ய சீக்ரெட் சர்வீஸ் உள்நாட்டு மோதலை உருவாக்க முயல்வதாக வாக்னர் குழு மீது குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அவர்கள் வழக்கும் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், ரஷ்ய ராணுவம் இதற்கு நேர்மாறாக தகவல்களைத் தெரிவிக்கிறது. அதாவது வாக்னர் குழு மீது தாங்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தியதே இல்லை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி இரு தரப்பும் மாறி மாறி பதிலடி கொடுத்து வரும் நிலையில், அங்கே பரபரப்பான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.