'ரெஜினா' விறுவிறுப்பாக இருக்கும் : சொல்கிறார் சுனைனா

'காதலில் விழுந்தேன்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், பெரிய அளவில் 'ஹிட்' ஆகவில்லை. 2022 இறுதியில் 'லத்தி' படத்தில் நடித்தார். தற்போது, 'ரெஜினா' படத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் படமாக வெளியாகி உள்ளது. அவருடன் ஒரு ஜில் பேட்டி!

காதலில் விழுந்தேன்… 'ரெஜினா'… இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டு படத்துக்கும் இடையே ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. இந்த படத்தில் பகல், இரவு நேரங்களில் அதிகம் 'ஷூட்' செய்துள்ளோம். காதலில் விழுந்தேன் படத்துக்கு பிறகு, பல தகவல்களை கற்றுக்கொண்டு, தனி திறமையை வளர்த்துள்ளேன். திரைத்துறையில் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

'ரெஜினா' தேர்வு செய்ய என்ன காரணம்?
திரைக்கதையை கேட்டதும், 'ஓகே' சொல்லிவிட்டேன். 'த்ரில்லர்' படம் எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். படக்குழுவினரின் நம்பிக்கை எனக்கு கூடுதல் பலத்தை கொடுத்தது. இந்த கதை யாரேனும் ஒருவருடைய வாழ்க்கையில் கண்டிப்பாக நடந்திருக்கும்.

தமிழ் திரைப்பட துறையில், உங்களுக்கென தனி அங்கீகாரம் இல்லாதது வருத்தமா இருக்கா?
ஆரம்ப காலத்தில் மேடை கலைஞராக இருந்துள்ளேன்; இது, பலருக்கும் தெரியாது. மேடை கலைஞர்களுக்கு அதிகமான படங்களில் நடிக்க வேண்டும்; இந்த கதைகளில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்காது. ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால், ஷூட்டிங் போது ஆர்வம் தானாகவே வர வேண்டும். அதற்கு நல்ல கதைகள் இருந்தால் மட்டுமே நடிக்க முடியும்.

எந்த மாதிரியான கதைகளை, தேர்ந்தெடுக்க ஆசைப்படுவீர்கள்?
ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். புதிததாக படம் நடிக்கிறேன் என்றால், புதிய தகவல் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்கும்.

உங்களின் அடுத்த புராஜெக்ட்?
'அமேசான் ஒரிஜினல்' ஓ.டி.டி., தளத்தில், சில புராஜெக்ட்டுகள் வேலை நடந்து வருகிறது; வரும் நாட்களில் வெளியிடப்படும். 'தொடு வானம்' படத்தில் நடிக்க உள்ளேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.