விக்ரம் பிரபுவுக்கு கை கொடுத்ததா 'பாயும் ஒளி நீ எனக்கு'.?: முழு விமர்சனம் இதோ.!

விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. நேற்றைய தினம் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் தனஜெயன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட காலமாக ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்தப்படம் கை கொடுத்துள்ளதா என்பதை தற்போது பார்க்கலாம்.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
அதீத வெளிச்சம் இருந்தால் மட்டுமே இயல்பான பார்வை தெரியும். மாலை குறைந்த வெளிச்சத்தில், இருட்டில் பார்வையில் தெளிவிருக்காது. இப்படியான குறைபாடுள்ள இளைஞனாக விக்ரம் பிரபு அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சொந்தமாக பிசினஸ், குடும்பம், நண்பர்கள் என நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒருநாள் இரவில் ரோட்டில் இரண்டு ரவுடிகள் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க, அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அங்கிருந்து அவருக்கு பிரச்சனை துவங்குகிறது. இன்னொரு பக்கம் அரசியலில் பெரும் செல்வாக்கு உடையவராக திகழும் வேல ராமமூர்த்தி இடத்தை குறுக்கு வழியில் அடைகிறார் தனஞ்செயன். இவர் எப்படி விக்ரம் பிரபு வாழ்க்கைக்குள் நுழைகிறார். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை.

Leo: ‘லியோ’ இண்டர்வெல் பிளாக் எப்படி இருக்க போகுது தெரியுமா.?: வெயிட்டிங்லயே வெறியாகுதே..!

விக்ரம் பிரபு தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். வாணி போஜன் சம்பிரதாயத்திற்காக வந்து போகும் கதாநாயகியாக காதல் மற்றும் டூயட் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளார். ஹீரோவின் நண்பராக டெம்பிளேட் கதாபாத்திரத்தில் வந்து போகிறார் விவேக் பிரசன்னா. பாடல்களும் சுமார் ரகம்.

இந்த மாதிரியான க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு பலமே திரைக்கதைதான். ஆனால் அடுத்தடுத்து யூகிக்க முடியும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய மைனஸாக அமைந்துள்ளது. இதனாலே படத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது. மொத்தத்தில் சுவாரஸ்யமான ஒன்லைனை வைத்துக்கொண்டு, சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால் தடுமாறி நிற்கிறது இந்த ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

Bose Venkat: ஒரே நாளில் சகோதரி, சகோதரனை பறிகொடுத்த பிரபல நடிகர்: கண்ணீரில் குடும்பம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.