2023 Ducati Panigale V4 R – ₹ 69.99 லட்சத்தில் டூகாட்டி பனிகேல் V4 R விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டூகாட்டி பனிகேல் V4 R சூப்பர் ஸ்போர்ட் பைக்கின் விலை ரூ.69.99 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜிபி ரேஸ் பைக்கிலிருந்து பெறப்பட்ட பல்வேறு மேம்பாடுகள், டைட்டானியம் கொண்டு தயாரிக்கப்பட்ட இருந்து என்ஜின் உதிரிபாகங்களை V4 R மாடலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

பனிகேல் V4 பைக்கில் 1103cc என்ஜின் பயன்படுத்தப்படும் நிலையில், பனிகேல் V4 R ஆனது 998சிசி என்ஜின் ஆனது பெற்றுள்ளது.

2023 Ducati Panigale V4 R

998cc, Desmosedici Stradale R இன்ஜின் 15,500rpm-ல் 215bhp பவர் மற்றும் 12,000rpm-ல் 111.3Nm டார்க் ரேஸ் டிராக்குகளுக்கு ஏற்ற சிறப்பான அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது. சிறப்பு ரேஸ் மாடல்களுக்கு ஏற்ற ஆயிலை பயன்படுத்துவதன் மூலம், அக்ராபோவிச் ரேசிங் புகைப்போக்கி மேம்படுத்துவதன் மூலம் பவர் 237bhp ஆக அதிகரிக்கப்படலாம். இதன் மூலம் 233bhp மற்றும் 118Nm ஆக அதிகரிக்கிறது. டூகாட்டி க்விக் ஷிஃப்டர் பெற்ற 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆனது இடம்பெற்றுள்ளது.

பனிகேல் வி4 ஆர் 43mm Ohlins NPX 25/30 முன் ஃபோர்க்குகள் மற்றும் Ohlins TTX 36 பின்புற மோனோஷாக் பெற்றுள்ளது. இவை இரண்டுமே முற்றிலும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை ஆகும். பிரேக்கிங் சிஸ்டத்தில் முன்பக்கத்தில் டூயல் 330மிமீ முன் டிஸ்க் ப்ரெம்போ மோனோபிளாக் ஸ்டைல்மா M4.30 காலிப்பர்கள் மற்றும் 245mm சிங்கிள் ரோட்டார் பின்புறத்தில் டூ-பிஸ்டன் காலிபர் இடம்பெற்றுள்ளது.

V4 R ஆனது நான்கு ரைடிங் முறைகள், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கன்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ டயர் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான எலக்ட்ரானிக்ஸ் தொகுப்பையும் கொண்டுள்ளது.

R மாடலில் ஜிபிஎஸ் தொகுதியுடன் கூடிய டுகாட்டி தரவு பகுப்பாய்வி, இயந்திர மிரர் பிளாக்-ஆஃப் பிளேட்கள் மற்றும் உரிமத் தகடு மவுண்ட் ரிமூவல் பிளக் உள்ளது.

தாய்லாந்தில் இருந்து விற்பனைக்கு வரும் Panigale V4 R ஆனது, ரூ. 69.9 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து யூனிட்கள் மட்டும் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்தும் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.