சென்னை: கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் தொடங்கவுள்ளது.
விடாமுயற்சி படம் குறித்து அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.
ஆனால், இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் அஜித்தின் போட்டோக்கள் இணையத்தை கலங்கடித்து வருகின்றன.
அஜித்தின் புது அவதாரம்: ஆசை நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
அதேபோல், விடாமுயற்சி டைட்டில் டீசர் வெளியான பின்னர் இதுவரை வேறு எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் விஜய்யின் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள், தளபதி 68 அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், விடாமுயற்சி படம் குறித்து இன்னும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் அஜித் ரசிகர்களே விரக்தியில் உள்ளனர்.

வலிமை, துணிவு படங்களுக்கு அப்டேட் கேட்டு டிவிட்டரில் ட்ரெண்ட் செய்ததைப் போன்றே இப்போதும் அடிக்கடி விடாமுயற்சி ஹேஷ்டேட் வைரலாகிறது. இதனிடையே பைக் ட்ரிப் செல்லும் அஜித்தின் புகைப்படங்களும் அவ்வப்போது ட்ரெண்டாகின்றன. விடாமுயற்சி அப்டேட் கிடைக்காத ரசிகர்களுக்கு இதுமட்டுமே பெரிய ஆறுதலாக உள்ளது.
இந்நிலையில், அஜித்தின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. துணிவு படத்தில் அஜித்தின் கெட்டப்பை எடிட் செய்துள்ள ரசிகர் ஒருவர், அதனை அப்படியே மில்கி கலரில் டிசைன் செய்துள்ளார். வெள்ளை நிற காஸ்ட்யூம், கோல்டன் அசசரிஸ் என படு மிரட்டலாக உருவாகியுள்ளது. இதுவரை அஜித்தை இப்படி ஒரு லுக்கில் யாருமே பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேநேரம் இந்த போஸ்டரை கலாய்த்தும் சிலர் கமெண்ட்ஸ் போட்டுள்ளனர். அதாவது “உண்மயாவே இது அஜித் தானா, பார்க்க சீயான் விக்ரம் மாதிரியே இருக்கு” என ட்ரோல் செய்துள்ளனர். மேலும் விடாமுயற்சி அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர் தான் இப்படி அஜித்தை வைத்து சம்பவம் செய்துள்ளார் எனவும் ஜாலியாக கலாய்த்துள்ளனர்.
