சென்னை: தமிழில் 2007ம் ஆண்டு வெளியான முதல் கனவே படத்தின் மூலம் அறிமுகமான ஹனி ரோஸ் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் தற்போது பிசியான நடிகையாக மாறி உள்ளார்.
மோகன்லால், பாலய்யா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்து அசத்தி வரும் ஹனி ரோஸ் அடிக்கடி கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.
சமீபத்தில், இத்தாலிக்கு சென்றிருந்த போதும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஹனி ரோஸை பார்த்த சந்தோஷத்தில் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் தீயாக பரவின.
நடிகை ஹனி ரோஸ்: 2005ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாய் ஃபிரெண்ட் படத்தில் நடித்த ஹனி ரோஸ் தமிழில் 2007ம் ஆண்டு முதல் கனவே படத்தில் அறிமுகமானார். ஜீவா நடித்த சிங்கம் புலி படத்திலும் இவர் தான் ஹீரோயின். மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ஹனி ரோஸ் கடைசியாக ஜெய் நடித்த பட்டாம்பூச்சி படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் சில படங்களில் நடித்த ஹனி ரோஸ் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

பாலய்யாவுக்கு அம்மா: இந்த ஆண்டு டோலிவுட் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ஹா ரெட்டி படத்தில் அப்பா பாலய்யாவுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் ஹனி ரோஸ் நடித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இளம் நடிகை பாலய்யாவுக்கே அம்மாவா என பலரும் ஷாக் ஆன நிலையில், அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் ஹனி ரோஸுக்கு குவிந்து வருகின்றன.
கடை திறப்பு விழாவில் பிஸி: மலையாள திரையுலகில் தற்போது மற்ற நடிகைகளை விட அதிகளவில் கடை திறப்பு விழாக்களில் ஹனி ரோஸ் தான் தென்பட்டு வருகிறார். பாலய்யா படத்திற்கு பிறகு ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் அம்மணியை தான் அடிக்கடி கடை திறக்க கூப்பிடுகிறார்கள் என்கின்றனர்.
சமீபத்தில், ஒரு பிரம்மாண்ட ஷோரூமை திறந்த ஹனி ரோஸ் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கவர்ச்சியில் கிக்கேற்றும் ஹனி ரோஸை பார்த்த ரசிகர்கள் ஒரே பாய்ச்சலாக அலைமோதும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.